தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினால் 'கூண்டோடு ராஜினாமா செய்வோம்' - கொந்தளித்த கோவை அ.தி.மு.க

0

சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க கூட்டணியில் ஒருவழியாக, தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் நாளுக்கு நாள் பிரச்னை வலுத்து வருகிறது. அந்தக் கூட்டணியில் இருந்து தே.மு.தி.க வெளியேறிய நிலையில், கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கு தொகுதிகளை உறுதி செய்வதிலும் இழுபறி நீடித்து வருகிறது.

கோவை தெற்கு

கோவையைப் பொறுத்தவரை, இங்கு தாங்கள் சற்று வலுவலாக இருப்பதாகக் கூறி பா.ஜ.க சில தொகுதிகளை எதிர்பார்க்கிறது. முக்கியமாக, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியை மையப்படுத்தி கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.

Also Read: 20 தொகுதிகள்... ஏன் இறங்கி சென்றது பா.ஜ.க ?

அதேபோல, தெற்கு தொகுதியில் சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அவர் அ.திமு.க மாநகர மாவட்ட செயலாளர் என்பதால், தெற்கு தொகுதியில் நிற்பதை கௌரவ பிரச்னையாக பார்க்கிறார். மேலும், அந்தத் தொகுதியில் சிறுபான்மை மக்கள் கணிசமாக இருப்பதாலும், வானதி சீனிவாசன் தேசிய அரசியலுக்கு சென்றுவிட்டதாலும், பா.ஜ.க நிர்வாகிகளே தெற்கு தொகுதியை டிக் செய்வதில் தயக்கம் காட்டினர்.

அம்மன் அர்ச்சுனன்

இதையெல்லாம் மனதில் வைத்து, கோவை தெற்கு தொகுதியை அ.தி.மு.க-வுக்கே ஒதுக்கலாம் என்று முடிவெடுத்தனர். பா.ஜ.க-வுக்கு கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

அதுவரை, “இது எங்க ஏரியா உள்ள வராத..” என்று பா.ஜ.க-வை சமூகவலைதளங்களில் சீண்டி வந்த அம்மன் அர்ச்சுனனின் ஆதரவாளர்கள், இந்த முடிவால் உற்சாகமாகினர். பூத் கமிட்டி அமைப்பது, பரப்புரையில் ஈடுபடுவது என்று களத்தில் ஆக்டிவானார்கள். இதனிடையே, வானதி சீனிவாசனுக்கு தெற்கு தொகுதியை விட்டுக் கொடுக்க மனம் இல்லையாம்.

வானதி சீனிவாசன்

தனது மேலிட செல்வாக்கின் மூலம் தெற்கு தொகுதியை பா.ஜ.க-வுக்கு உறுதி செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடுப்பான அம்மன் அர்ச்சுனன் ஆதரவாளர்கள், இன்று கோவை அ.தி.மு.க அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர்.

“வேண்டும்.. வேண்டும்.. தெற்கு தொகுதி வேண்டும்.. இது அ.தி.மு.க கோட்டை. மக்கள் பணி செய்யும் அம்மன் அர்ச்சுனன் தான் மீண்டும் வரவேண்டும்” என்று ஆவேசமாக கோஷம் போட்டனர். சிலர் சட்டையை கழற்றி, உருண்டு புரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கோவை அ.தி.மு.க அலுவலகம்
கோவை அ.தி.மு.க போராட்டம்
கோவை அ.தி.மு.க போராட்டம்
கோவை அ.தி.மு.க போராட்டம்
கோவை அ.தி.மு.க போராட்டம்

“கோவை தெற்கு தொகுதியை அ.தி.மு.க-வுக்கு கொடுக்காவிடின், அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துவிடுவோம்” என்றும் அம்மன் அர்ச்சுனன் ஆதரவாளர்கள் கூறினர். இந்த விவகாரத்தால் அ.தி.மு.க தலைமைக்கு மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/38sI37h
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*