திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தேன்மொழி மீண்டும் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் தேன்மொழி வெற்றிபெற்றதாலும், நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர் என்பதாலும், மீண்டும் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேன்மொழியை எதிர்த்து தி.மு.க சார்பில் யார் களம் இறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
வேட்பாளராக, மக்கள் விடுதலைக் கட்சியின் மாநிலத் தலைவர் முருகவேல்ராஜன், அறிவிக்கப்பட்டார். இதனால் தி.மு.க நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். வேட்பாளரை எதிர்த்து போராட்டம் நடத்தக் கூடாது என கட்சித் தலைமை கூறியதால், நிலக்கோட்டை தி.மு.க நிர்வாகிகள் அமைதியாகினர். இந்நிலையில், நேற்று, நிலக்கோட்டை தி.மு.க முக்கிய நிர்வாகிகளை வேட்பாளர் முருகவேல்ராஜன் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.
Also Read: திண்டுக்கல்: `என்ன கேட்டாலும் செஞ்சு கொடுப்பேன்!’ - பிரசாரத்தை ஆரம்பித்த அ.தி.மு.க வேட்பாளர்
அவர் பேசும் போது, ”நிலக்கோட்டை தொகுதி, கடந்த 25 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், முதல்வராவது உறுதியாகிவிட்ட நிலையில், நிலக்கோட்டையில் உதயசூரியன் வெற்றி பெற வேண்டும். தி.மு.க கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் விடுதலை மக்கள் கட்சியின் தலைவராக நான் இருந்தாலும், தற்போது தி.மு.க வேட்பாளராகவே களம் இறங்கி தேர்தல் பணியாற்ற இருக்கிறேன். அதனால், தேர்தல் முடியும் வரை, எனது கட்சிக்கு லீவு விட்டுள்ளேன்!” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qMTs8j
via
