``பெற்ற தாயும் இல்லை, வளர்த்த தாயும் இல்லை” - பிரசாரத்தில் உருகும் செல்லூர் ராஜூ

0

"காரில் வரும்போதுதான் அமைச்சர். கீழே இறங்கிவிட்டால் நானும் சமுதாயத்தில் ஒருவன்தன்" என்று செண்டிமெண்டாக பேசி பிரசாரம் செய்து வருகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

செல்லூர் ராஜூ

மதுரை மேற்குத் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் செல்லூர் ராஜூ மீண்டும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். பலமான எதிர்க்கட்சி கூட்டணி, சொந்தக் கட்சியில் உள்ளடி வேலைகள் என நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில், தன்னுடைய வெற்றிக்காக ஒரு பகுதி விடாமல் பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று மனு தாக்கல் செய்வதற்கு முன், தாராப்பட்டியிலுள்ள கோயிலில் வழிபட்டு கொடிமங்கலம், காமாட்சிபுரம், மேலமாத்துர், கீழமாத்தூர் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.

மனு தாக்கல் செய்த செல்லூர் ராஜூ

" கடந்த ஆண்டுகளில் தொகுதிக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வந்துள்ளேன். கிராம மக்களுக்கு அரசுத் திட்டங்கள் தடையின்றி செல்ல, என்னுடைய துறையில் சிறப்பாக பணி செய்து அப்பழுக்கற்றவனாக உள்ளேன்

காரில் வரும்போதுதான் அமைச்சர். கீழே இறங்கிவிட்டால் நானும் சமுதாயத்தில் ஒருவன்தான். அதிமுக தொண்டன்தான். என்னை பெற்ற தாயும் இல்லை, என்னை பொதுவாழ்வில் வளர்த்த தாயும் இல்லை. என்னை காப்பாற்றும் தாய் நீங்கள்தான்.

செல்லூர் ராஜூ

வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை இதுபோன்ற நெக்குருகும் பேச்சுகளை செல்லூராரிடமிருந்து எதிர்பார்ககலாம் என்கிறார்கள் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2PWyNBU
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*