``வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படும். போராடி போராடி அலுத்துப் போன விவசாயிகளுக்கு, ஓட்டு மூலம் நடத்தும் ஒரு போராட்டம் நடத்தும் நோக்கில் மஹா பஞ்சாயத்து கூட்டம் என்று வரும் திருச்சியில் மார்ச் 6 -ம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கு. அதில், 250 முக்கிய விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு முக்கிய முடிவு எடுக்க உள்ளோம்" என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பு, நாமக்கல் பரமத்தி ரோடு பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,
``வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி ரவி மினிஹாலில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில், வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படுத்தும். போராடி போராடி அலுத்து போன விவசாயிகளுக்கு ஓட்டு மூலம் நடத்தும் ஒரு போராட்டம் நடத்தும் நோக்கில் மஹா பஞ்சாயத்து கூட்டம் என்று கூட்டி, அதில் 250 முக்கிய விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு முக்கிய முடிவு எடுக்க உள்ளோம். அதில், விவசாயிகளுக்கு நன்மைசெய்தவர்களுக்கு இந்த மஹா பஞ்சாயத்து கூட்டம் நல்ல முடிவு எடுக்கும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய மோடி அரசு சட்டத்தை கொண்டு வந்தது.
அதற்காக போராடிய விவசாயிகளை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நானும் டெல்லி சென்று விவசாயிகள் நடத்தியப் போராட்டத்தில் 6 நாள்கள் கலந்துகொண்டேன். அப்போது, விவசாயிகளின் வேதனை புரிந்தது. ஆனால், விவசாயிகளையும், அவர்களின் நியாயமானப் போராட்டத்தையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத மோடி, அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும். விவசாயிகள் அடிப்படை பிரச்னைகளுக்காக எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், அரசாங்கங்கள் அவர்களை கண்டுகொள்வதில்லை.
Also Read: தேர்தல் நடத்தை விதி: தீவிரமடையும் கண்காணிப்பு - விவசாயியின் பணம் பறிமுதல்!
பேச்சுவார்த்தை என்று அழைத்து, விவசாயிகளின் போராட்டங்களை பிசுபிசுத்துப்போக வைக்கிறார்கள். போராட்டங்களால் எதையும் செய்ய முடியாது என்று இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் சோர்ந்துபோயிருக்கிறார்கள். எனவே, எங்களது வாக்குகளையே ஆயுதங்களாக்க முடிவு செய்திருக்கிறோம். ஏற்கனவே, பல அமைப்புகள் ஆதரவு தர பேசி வருகிறார்கள். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவு தர உள்ளோம். நாங்க யாரை ஆதரிக்கிறோம் என்பதை திருச்சியில் வரும் 6 ஆம் தேதி முடிவுசெய்ய உள்ளோம். பிரிந்து கிடக்கும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி, அவர்களின் வாக்குகளையே ஆயுதமாக்க இருக்கிறோம்.
தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் மற்றும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. 12,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் 90 சதவிகிதம் பேர் அ.தி.மு.கவினர்தான். சாதாரண விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் கடன் வாங்கியுள்ளனர். அதனால், அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். இதனால், நாங்க தி.மு.கவுக்கு ஆதரவளிக்கப் போறோம்னு சொல்றது தவறு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்கு ஆதரவாக வாக்குறுதிகளை வழங்கிய மக்கள் நலக் கூட்டணிக்கு எங்கள் ஆதரவை தந்தோம். அதேபோல், வரும் தேர்தலில் விவசாயிகளுக்கு தோழனாக இருக்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2NSAv6X
via
