"ஜனநாதனின் போராட்ட குரல் ஓங்கி ஒலிக்கும்... திட்டமிட்டபடி ஏப்ரல் ரிலீஸ்!" - `லாபம்' தயாரிப்பாளர்

0

பொதுவுடமை அரசியலை சினிமாவின் வழியாக பேசக்கூடிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' 'புறம்போக்கு' படங்களை இயக்கியவர் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து 'லாபம்' படத்தை எடுத்திருந்தார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்திருந்த இப்படத்துக்கு இமான் இசையமைத்திருந்தார். கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்திருந்தனர். படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் முழுவதுமாக முடிந்திருந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த போது திடீர் உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு ஜனநாதன் மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. இந்நிலையில் 'லாபம்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருகிறது.

லாபம் டீம்

''இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிபடுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. 'லாபம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த தருணத்தில் ஜனநாதன் மறைந்தது வருத்தை அளிக்கிறது. 'லாபம்' படத்தின் அனைத்து வேலைகளையும் முழுமையாக அவர் முடித்து கொடுத்து விட்டார். மிச்சமிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தியேட்டர்களில் பிரமாண்டமாக படம் வெளியாகவுள்ளது'' என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

'லாபம்' படத்தை 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தை தயாரித்து, இயக்கிய ஆறுமுககுமாரும், விஜய் சேதுபதியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/2PaAN9k
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*