தமிழகம் முழுக்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி புவனகிரி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர்,``அ.தி.மு.க அரசைப் பற்றி தொடர்ச்சியாக பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அவரின் பேச்சு மக்களைக் குழப்பும் நாடகம். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. காவிரி பிரச்னையை அவர்தான் தீர்த்ததாக கூறிவருகிறார் ஸ்டாலின்.
அது பொய். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் காவிரி பிரச்னையை தீர்த்த்து. ஆட்சியில் இருக்கும்போதே விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்தது தி.மு.க. மத்திய காங்கிரஸ் ஆட்சியுடன் அவர்கள் கூட்டணியில் இருந்தபோது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டிருந்தால் காவிரி பிரச்னை தீர்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. பல்வேறு போராட்டத்திற்கிடையே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது அதிமுக அரசுதான்.
அனைத்து செய்திகளும் தற்போது மின்னல் வேகத்தில் அடுத்த நொடியே உலகம் முழுக்க செல்கின்றன. இப்படியான விஞ்ஞான காலத்தில் ஸ்டாலின் கூறும் பொய் எடுபடாது. ஒரு மாநிலத்தின் முதல்வரை எப்படி பேசவேண்டும் என்பது கூட ஒரு கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்குத் தெரியவில்லை.
எங்கள் தாத்தா, முப்பாட்டன் காலத்திலிருந்து விவசாயம் செய்து வருகிறோம். நான் விவசாயி என்று சொல்லிக்கொள்வதில் ஸ்டாலினுக்கு ஏன் எரிச்சல்? நான் ஊர்ந்து சென்று முதல்வராக பதவி ஏற்றதாக சொல்கிறார். ஆனால் நான் நடந்து சென்றுதான் பதவி ஏற்றுக் கொண்டேன். ஊர்ந்து சென்று முதல்வராவதற்கு நான் என்ன பாம்பா, பல்லியா? டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டத்தை தி.மு.க.தான் கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடியபோது, அப்படியே பல்டி அடித்து அதற்காக போராட்டம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்.
Also Read: `ஸ்டாலினைப் போல் அல்ல; நான் செய்வதைத் தான் சொல்வேன்!'- முசிறியில் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி
விவசாயிகள் மழை, வெய்யிலில் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். ஆனால் சிமென்ட் ரோடு போட்டு விவசாய நிலத்தைப் பார்க்க சென்ற ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும்? ஸ்டாலின் உழைத்து வரவில்லை. மற்றவர்களின் உழைப்பில் வந்தவர். நிர்வாகத்திறன் இல்லாதவர். தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் கடைக்குக் கடை மாமூல் வசூலிப்பார்கள்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2NxA9SZ
via
