புதுச்சேரி: தேர்தலில் போட்டியில்லை; காங்கிரஸ் தலைவராகிறாரா நாராயணசாமி?

0

தமிழ்நாடு மற்றும் கேரளத்துடன் புதுச்சேரிக்கும் சேர்த்து ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பா.ஜ.க மாநிலத் தலைவரும், நியமன எம்.எல்.ஏ-வுமான சாமிநாதன்

அதேபோல எதிணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ஜ.க 9 இடங்களிலும், அ.தி.மு.க 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேசமயம் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கிறார் முன்னாள் காங்கிரஸ் முதல்வரான நாராயணசாமி. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ``தேர்தலில் போட்டியிடாமல் நாராயணசாமி முதல்வரானதால்தான் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ-க்கள் தீப்பாய்ந்தான், லட்சுமிநாராயணன், ஜான்குமார் போன்றவர்கள் வெளியேறியதாக நினைக்கின்றனர் எங்கள் கட்சி நிர்வாகிகள்.

அதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடாததுடன், மீண்டும் தேசிய அரசியலுக்கு திரும்பலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் நாராயணசாமி. அதேசமயம் தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஏ.வி.எஸ் சுப்பிரமணியன், காரைக்கால் வடக்குத் தொகுதியின் வேட்பாளராகவும் இருக்கிறார். காரைக்காலில் தேர்தலை எதிர்கொள்ளப் போகும் அவரால், அடிக்கடி புதுச்சேரிக்கும் வரமுடியாது. அதனால் பழுத்த அரசியல்வாதியான நாராயணசாமியை தலைவராக்கி, 10 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேர்தலை எதிர்கொள்ளலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள் எங்கள் தலைவர்கள்” என்றனர்.

Also Read: புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தேர்தல்; முதல்வர் நாராயணசாமி ஆதரவாளர் அதிர்ச்சி தோல்வி

அதேபோல சமீபத்தில் பா.ஜ-வில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வான ராமலிங்கத்தை கட்சியின் மாநில துணைத் தலைவராக்கியிருக்கிறது அக்கட்சித் தலைமை. தற்போது லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதனை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக வேறொருவரை தலைவராக நியமித்தால் கட்சி புத்துயிர் பெறும் என்று ஆலோசித்து வருகிறாதாம் பா.ஜ.க தலைமை.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qZtIpu
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*