நயினார் நாகேந்திரன்: பா.ஜ.க பட்டியல் அறிவிப்புக்கு முன்பே வேட்புமனு தாக்கல்! -என்ன காரணம்?

0

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணியை முடிவு செய்ததுடன் தொகுதிப் பங்கீட்டையும் முடித்துள்ளனர். பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் தேர்வை முடித்து பெயர்களையும் அறிவித்துவிட்டனர்.

Also Read: தி.மு.க-வில் நயினார் நாகேந்திரன், முல்லைவேந்தன்? - அறிவாலயத்தின் அடுத்தடுத்த முயற்சிகள்!

காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை தொகுதிக்காக நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு நெல்லை சட்டப்பேரவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கட்சி சார்பாக இன்னும் அதிகாரப்பூர்வ வேட்பாளரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலரான சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

நயினார் நாகேந்திரன்

வேட்புமனு தாக்கல் செய்தபோது சொந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. அத்துடன், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் தன் இளைய மகன் விஜய் சண்முகநயினாருடன் சென்று மனுத்தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”நான் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறேன். வேட்பாளர் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பார்கள். பட்டியல் அறிவிப்புக்கு முன் வேட்பு மனுத்தாக்கல் செய்ததற்குக் காரணம், தற்போது நல்ல நேரம் என்று சொன்னதால் அந்த நேரத்தில் எனது மனுவைத் தாக்கல் செய்தேன். அது மட்டுமே நான் வேட்புமனு தாக்கல் செய்யக் காரணம்.

செய்தியாளர் சந்திப்பு

கூட்டணிக் கட்சியினரான அ.தி.மு.க-வினர் எனக்குத் தொடர்ந்து ஒத்துழைப்புத் தருவார்கள். நெல்லை தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இந்தத் தொகுதியில் ஜவுளி பூங்கா உள்ளிட்ட தேவையான திட்டங்களைக் கொண்டுவர முயற்சி எடுப்பேன்.

நான் இந்தத் தொகுதியில் 5 வது முறையாகப் போட்டியிடுகிறேன்.தொகுதிக்கும் தொகுதி மக்களுக்கும் நான் பொறுப்பில் இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குச் சேகரிப்பேன். மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் வெற்றியைக் கைப்பற்றுவேன்” என்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல்

வேட்பாளர் அறிவிப்பு வருவதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் தங்களை அழைக்காமல் சென்று வேட்புமனு தாக்கல் செய்ததை அறிந்த பா.ஜ.க-வினர் அதிருப்தி அடைந்தார்கள். அ.தி.மு.க-வினரும் அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தல் வாக்கு சேகரிப்பில் எதிரொலிக்குமா என்பது போகப்போகவே தெரியும்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3exrCdN
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*