"பா.ஜ.க-ல சேரச் சொன்னார் முருகன்ஜி... ஆனா, நான் No Thanks-னு சொல்லிட்டேன்!" - பவர்ஸ்டார் சீனிவாசன்

0

'லத்திகா' படத்தின் மூலம் தன்னை சினிமாவுக்குள் பவர் ஸ்டார் சீனிவாசனாக அறிமுகப்படுத்தி கொண்ட சீனிவாசனிடம் பேசினேன்.

"அக்கு பஞ்சர் டாக்டரா இருந்துட்டு வந்தேன். இதுக்கு இடையில சில பிசினஸ் வேலைகளும் செஞ்சிட்டு இருந்தேன். ஆனா, எனக்கான பப்ளிசிட்டி கிடைக்கலைனு வருத்தம் இருந்துக்கிட்டே இருந்தது. பப்ளிசிட்டி கிடைக்க என்ன பண்ணனும்னு யோசிச்சேன். அப்போதான் சினிமால ஹீரோவா அறிமுகமாகலாம்னு தோணுச்சு. என்னை வெச்சு படம் தயாரிக்க யாரும் முன்வரல. இதனால நானே ஹீரோ ப்ளஸ் தயாரிப்பாளரா களம் இறங்கிட்டேன்" என்று ஆரம்பித்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

பவர்ஸ்டார் சீனிவாசன்

''படத்தோட டைரக்டர் யார்னு தேடிக்கிட்டு இருந்தப்போ உதவி இயக்குநர் ஒருத்தர் வாய்ப்பு கேட்டு என்கிட்ட வந்தார். அவர்கிட்ட மூணு கதைகள் வரைக்கும் கேட்டேன். அதுல 'லத்திகா' கதை பிடிச்சிருந்தது. உடனே கதையை ஓகே பண்ணிட்டேன். படத்துக்கு என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சப்போ 'என்னோட பொண்ணு பேர் லத்திகா. அதனால அந்தப் பேரே இருக்கட்டும்'னு டைரக்டர்கிட்ட சொன்னேன். அவரும் ஓகே சொன்னார். உடனே, படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டேன். முக்கியமா, இந்தப் படத்துல நடிக்குற வரைக்கும் எனக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. எல்லாமே முதல் அனுபவமாத்தான் இருந்தது. சினிமால பெரிய அனுபவம் இல்லாம இருந்ததுனாலயே என்னை சுத்தியிருந்தவங்க நிறையப் பேர் என்னை ஏமாத்துனாங்க.

ஒரு ஷாட்டுக்கு ரெண்டு லாரி தண்ணீர் தேவைப்பட்டுச்சுனா இருபது லாரி வரைக்கும் கொண்டு வந்து ஸ்பாட்ல நிறுத்துனாங்க. ரெண்டு லாரி தவிர மிச்சமிருந்த பதினெட்டு லாரியிலயும் தண்ணீர் வந்திருக்குனு பொய் கணக்கு சொல்லி காசு சம்பாதிச்சிட்டாங்க. இதெல்லாம் எனக்கு லேட்டாதான் தெரிய வந்துச்சு. இதுக்கு அப்புறம் படத்துல நடிச்சிருந்த சீனியர் டைரக்டர் ஒருத்தரும் ஏமாத்தி காசு வாங்கிட்டார். இந்தப் படம் எடுத்ததுனால நஷ்டம் ஏற்பட்டதுதான் மிச்சம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

" 'லத்திகா' படத்தோட ஆடியோ லான்சுக்கு தமிழ்நாட்டுல இருந்த பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவங்க எல்லோரையும் கூப்பிட்டு இருந்தேன். அப்போ மேடையில பேசுன தொல்.திருமாவளவன் எனக்கு பவர்ஸ்டார்னு பட்டம் கொடுத்தார். அப்போ இருந்து இப்போ வரைக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன்னுதான் எல்லாரும் என்னை கூப்பிடுறாங்க. இதுக்காக 'லத்திகா' படத்தோட டைட்டில் கார்ட்ல திருமா அவர்களுக்கு நன்றி சொல்லியிருப்பேன். படத்தோட பப்ளிசிட்டிக்காக சென்னை முழுக்க கட் அவுட் மற்றும் போஸ்டர் ஒட்டியிருந்தேன். ஓட்டேரி மகாலட்சுமி தியேட்டர்ல மட்டும் இந்தப் படத்தை ஒரு வருஷம் ஓட்டினேன்.

இதுமாதிரி நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் படத்துக்காக பண்ணேன். இப்போ 'லத்திகா 2' எடுக்கவும் ரெடியாகிட்டேன். சீக்கிரமே அறிவிப்பு வரும்" என்ற பவர் ஸ்டாரிடம், "அரசியல்ல ஆளையே பார்க்க முடியலயே?" என்றேன்.

பவர்ஸ்டார்

"இந்திய குடியரசு கட்சியின் சார்பா எம்.பி. தேர்தல்ல தென் சென்னை ஏரியாவுல நின்னேன். சரியா பிரசாரத்துக்கு போகாத காரணத்தால எண்ணூறு ஓட்டு வாங்கி தோத்துட்டேன். இதுக்கு அப்புறம் என்னோட நண்பர் ஒருத்தருடன் பா.ஜ.க முருகனை பார்க்கப் போயிருந்தேன். இதை பார்த்துட்டு சிலர் நான் பி.ஜே.பி-ல சேர்ந்துட்டேன்னு சொன்னாங்க. ஆனா, பி.ஜே.பி-ல சேரல. 'எங்க கட்சியில சேர்ந்துக்குங்க'னு முருகன் சொன்னார். ஆனா, நான் No Thanks-னு சொல்லிட்டேன். அரசியல்லயும் சிலர் என்னை ஏமாத்திட்டாங்க. சரியான மரியாதையும் கிடைக்கல. அதனால, இப்போதைக்கு அரசியலை விட்டு விலகியிருக்கேன்" என்று அப்பாவி முகத்துடன் சிரிக்கிறார் பவர்ஸ்டார்.



from தமிழ் சினிமா https://ift.tt/3cgE93J
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*