தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாமணி மற்றும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்வதாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,`` தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல தகவல்கள் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் மாற்றம் மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை நியமித்தும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜாமணி மற்றும் சுமித் சரண் ஆகியரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றுவதாக கூறப்பட்டு இருக்கிறது கவனிக்க வேண்டிய விஷயம். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் சார்பாக செயல்படும் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் தேர்தல் அல்லாத பணிகளுக்கு இரண்டு அதிகாரிகளும் மாற்றப்பட்டிருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், நாகராஜன் ஐ.ஏ.எஸ்-ஐ மதுரை மாவட்ட ஆட்சியராக நீதிமன்றம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது தமிழ்நாடு காவல்துறை பயிற்சி அகாடமியின் இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/31hnary
via
