உடன்பிறப்புகள் கவனத்திற்கு... விஜய் ஏன் கறுப்பு - சிவப்பு சைக்கிளை ஓட்டி வந்தார்?!

0
தேர்தல் நாளில் வழக்கம்போல இடது கை விரலை கேமராக்கள் முன் காட்டாமல் வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசித்து வைரலாகியிருக்கிறார் விஜய். சென்னை ஈசிஆாில் சிக்னல்களில் புகுந்து புகுந்து, வாகனத்தை விரட்டி விரட்டி, விஜய் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டது டிவி செய்திகள் தாண்டி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் பல பிஜிஎம்களோடு அலறிக்கொண்டிருக்கிறது.

கிட்டதட்ட 40 கிலோமீட்டா் வேகத்தில் விஐய் பறந்து வந்தது மான்ட்ரோ எனும் சைக்கிளில். விஜய் யாருக்கு ஓட்டுப்போட்டிருப்பாா் என்பது நமக்குத் தொியாது. ஆனால், அவா் ஓட்டி வந்த சைக்கிளைப் பற்றி கொஞ்சம் தெரியும்... விவரங்கள் இங்கே!

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்
விஐய் ஓட்டி வந்த சைக்கிள் மாடலின் பெயா் மான்ட்ரா மெட்டல் 27.5. சென்னையில் இதன் விலை 22,800 ருபாய். Hardtail அலாய் ஃப்ரேமில் தயாாிக்கப்பட்டிருக்கும் இதன் பாடி, விஐய்யைவிட டபுள் மடங்கு எடை கொண்டவர்களைக்கூடத் தாங்கும் அளவுக்கு, பில்டு குவாலிட்டியில் பக்கா.

மான்ட்ரா மெட்டலைப் பொருத்தவரை சிட்டி ரைடிங்காகவே தயாாிக்கப்பட்டது இது. இதன் எடை வெறும் 15.8 கிலோதான். இதிலிருக்கும் ஸூம் சஸ்பென்ஷன் ஃபோர்க்கின் டிராவல் 60 மில்லி மீட்டா். அதனால், மேடு, பள்ளங்களை சரியாகச் சமாளிக்கும். இதில் மெக்கானிக்கல் லாக் அவுட் இருப்பது கூடுதல் வசதி. ஃப்ளாட் ஆன சாலைகளில் பயணம் செய்யும்போது ஃபோா்க்கை லாக் செய்து கொள்ளலாம். டிஸ்க் பிரேக்கும் உண்டு.

2019-ல் விற்பனைக்கு வந்த இந்த சைக்கிள் காா்பன் பிளாக்/நியான் சிவப்பு எனும் ஒரே நிறத்தில்தான் வருகிறது. இந்த சைக்கிளில் வேறு நிறங்களே கிடையாது (உடன்பிறப்புகள் கவனத்திற்கு).
நடிகர் விஜய்

மான்ட்ராவில் இருப்பது 24 கியா்கள். ஸ்மூத்தான கியா் டிரான்ஸ்மிஷன் ரைடிங்கிலேயே செய்து கொள்ளலாம். காரணம் இதிலிருப்பது 3x8 Tourney ஸ்பீடு deraileurs. இதன் எக்ஸ்எம்ஆா் சேடில் சீட் பாா்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் மேடு பள்ளங்களில் மெத் மெத் என்று இருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸூம் அதிகமாக இருப்பதால் ஸ்பீடு பிரேக்கா்களில் அடி விழாது!

கடந்த மாதம் சைக்கிளிலேயே கொல்கத்தா வரை சென்று ட்ரெண்டானார் அஜித். இன்று விஜய் சைக்கிளில் நீலாங்கரைக்குள்ளேயே சுற்றிவந்து ட்ரெண்டாகியிருக்கிறார்... இதிலிருந்து என்ன தெரிகிறது?!


from தமிழ் சினிமா https://ift.tt/3sVxamP
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*