மதுரை மாவட்டத்தில் காலையில் வாக்குப்பதிவு சற்று மெதுவாக தொடங்கினாலும், தொடர்ந்து ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக இருந்தது.
மீனாட்சிக் கல்லூரியில் வாக்களிக்க செல்லூர் ராஜூ குடும்பத்துடன் வந்து வாக்கை பதிவு செய்தபோது பதிவானதற்கான ஒப்புகை சீட்டு தெரியவில்லை. அதனால், அவரை 20 நிமிடம் அங்கேயே அமர வைத்தனர். இயந்திரத்தை சரி செய்த பின் மீண்டும் வாக்களித்தார். ஆரம்பமே இப்படி ஆயிடுச்சே என்று செல்லூர் ராஜூ ரொம்பவும் அப்செட்டானார்.
அவருடைய தொகுதியில் பெத்தானியாபுரம் பகுதியில் சிலருக்கு மட்டும் வாக்களிக்க பணம் வழங்கியதாகவும், பலருக்கு வழங்கவில்லை என்று 50-க்கும் மேற்பட்டோர் 21வது வார்டு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு எந்த பதிலும் இல்லாததால் கலைந்து சென்றார்கள்.
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருப்பாயூரணி பள்ளியில் சாந்தி என்பவர் வாக்களிக்க வந்ததபோது அவருடைய வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. வாக்காளர் அட்டை காட்டாமல், கைரேகை வைத்து, பூத் ஸ்லிப்பை மட்டும் வைத்து வாக்களிக்க அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கேள்விகளுக்கு அதிகாரிகள் எந்த விளக்கமும் சொல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றாத்துடன் திரும்பி சென்றார்.
சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி வட்டாரத்தில் அதிமுகவுக்கு வாக்களிப்பவர்களுக்கு பணம் வழங்கும் வகையில் சின்னம் பொறித்த டோக்கன் வழங்கியுள்ளனர். அதை வாங்கியிருந்த பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வந்து கிழித்து எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் வாக்களிக்க குடும்பத்தினருடன் நரிமேடு பள்ளிக்கு காலையில் வந்தார். அப்போது வரிசையில் நின்றிந்த 60 வயதானவர், திடீரென மயங்கி விழுந்தார். அத்தகவல் டாக்டர் சரவணனிடம் சொல்லப்பட்டது.
உடனே மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அருகிலுள்ள மருத்துவனனைக்கு கொண்டு செல்ல வைத்தார்.
ஆர்.பி.உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் டி.கல்லுப்பட்டி, கோசநாடு புதுப்பட்டி, டி.குன்னத்தூர், திருமங்கலம் அரசு பள்ளி வககுச்சாவடிகளில் வாக்கு எந்திரங்கள் செயல்படவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது. தன் வீட்டை டி.குன்னத்தூருக்கு மாற்றிவிட்ட ஆர்.பி.உதயகுமார் அங்கே உள்ள பள்ளியில் வாக்களித்தார்.
மாவட்ட நிர்வாகத்தால் வாக்குச்சாவடிகளில் எந்த ஏற்பாடுகளும் சரியாக செய்யவில்லை என்ற புகார் பொதுமக்களால் சொல்லப்பட்டது.
பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை. வீல்சேர் ஏற்பாடுகளும் சாய்வு நடைமேடையும் அமைக்கப்படவில்லை. அதனால், நடக்க இயலாதவர்களை தூக்கி சென்று வாக்களிக்க வைத்தனர்.
இது மட்டுமில்லாமல் வாக்காளரின் உடல் வெப்பத்தை சோதனை செய்தவர்கள், 95 பாரன்ஹீட் இருந்தாலே அவர்களை வாக்களிக்க விடாமல் மாலையில் வரும்படி திருப்பி அனுப்பினார்கள். கடுமையான வெய்யிலில் வாக்களிக்க வருகிறவர்களின் உடல் சூடாகத்தான் இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் வாதிட்டாலும் அவர்களை அனுமதிக்கவில்லை.
வாக்குச்சாவடி சீட்டுகளை தேர்தல் பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து முறையாக விநியோகம் செய்யாததால் வாக்குச்சாவடியில் அதை சரிபார்க்கவே அதிக நேரம் பிடித்தது. இதனால் வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cRlTy6
via
