காஷ்மீர் ரிஸ்க்... ஜார்ஜியாவுக்கு பறக்கும் விஜய்! #Vijay65 அப்டேட்ஸ்!

0

'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு, விஜய் நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்ற கேள்விக்கு தெளிவான விடை தெரியவே சில காலமாகிவிட்டது. 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கிய நெல்சன்தான் இயக்குநர் என்பது தெரியவந்த பிறகு, அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக காத்திருந்தனர் விஜய் ரசிகர்கள். பிறகு, படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 'முகமூடி' படத்திற்கு பிறகு, பூஜா ஹெக்டே நடிக்கும் தமிழ் படம் இது.

அனிருத் இசை, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு, அன்பறிவ் ஸ்டன்ட், டி.ஆர்.கே.கிரண் கலை இயக்கம் என படம் டெக்னிக்கலாகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்தப் பூஜைக்கு வந்த விஜய்யின் புகைப்படம் அன்றைய டாக் ஆஃப் தி டவுனாக மாறியது. நாளை நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்துவிட்டு, படக்குழுவோடு நாளை இரவு ஜார்ஜியா செல்லவிருக்கிறார் நடிகர் விஜய்.

விஜய் 65 படக்குழு

பனிப்பிரதேசமான காஷ்மீரில் சில காட்சிகளை எடுக்க நினைத்தது படக்குழு. ஆனால், காஷ்மீரில் படப்பிடிப்பின்போது சில சிக்கல்கள் எழலாம் என்பதால் படப்பிடிப்பு தளத்தை ஜார்ஜியாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். ஜார்ஜியாவில் பனிக்கட்டிகளுக்கு இடையில் இந்த மாத இறுதிவரை முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தவிர, 'மாஸ்டர்' படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/31MBUPB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*