`சீக்கிரமா எல்லோரும் நல்லாகிடணும்!’ - நிவாரண நிதிக்கு ₹5,000 கொடுத்த குழந்தைகள் #SpreadPositivity

0

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள அம்மூரைச் சேர்ந்தவர் முனுசாமி. ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் வேலை செய்கிறார். இவரின் மனைவி பூங்கொடி. இந்தத் தம்பதிக்கு 13 வயதில் நவீனா, 11 வயதில் ஷர்மிளா என்ற இரண்டு மகள்களும், 5 வயதில் யோகேஸ்வரன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நவீனா ஏழாம் வகுப்பும், ஷர்மிளா ஐந்தாம் வகுப்பும், யோகேஸ்வரன் எல்.கே.ஜி-யும் படிக்கிறார்கள்.

குழந்தைகளை பாராட்டி பரிசளித்த ஆட்சியர்

இந்த மூன்று குழந்தைகளும் உண்டியலில் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ.5,036 பணத்துடன் இன்று காலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜை சந்தித்தனர். கொரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அப்பணத்தை கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட ஆட்சியர் குழந்தைகளின் நற்குணங்களைப் பாராட்டி வாட்டர் பாட்டில்களை அன்புப் பரிசாக வழங்கினார்.

நிவாரண நிதி கொடுத்த மூன்று குழந்தைகளிடமும் பேசினோம். ``எங்களுக்கு தாத்தா, பாட்டி, அப்பா அடிக்கடி காசு கொடுப்பாங்க. அதை வீண் செலவு பண்ணாம சேர்த்து வைக்கணும்னு தோனுச்சி. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அம்மா ஒரு உண்டியல் வாங்கிக் கொடுத்தாங்க. அதுலதான் இந்தக் காசை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்சோம். எந்த பொருளையும் வாங்கிற ஐடியாவுல சேர்த்து வைக்கல.

Spread Positivity

Also Read: ரிமோட் கார் வாங்க வைத்திருந்த ₹1,400 பணம்; கொரோனா நிதிக்குக் கொடுத்த சிறுவன்! #SpreadPositivity

டி.வி, வாட்ஸ் அப்ல குட்டி குட்டி பாப்பா, பிரக்னன்ட் ஆன்ட்டி எல்லாம் கொரோனாவுல பாதிக்கப்படுறதை பார்த்து அழுதுட்டோம். இன்னும் நிறைய பேர் ஆக்ஸிஜன் இல்லாம உயிரிழக்குறதாவும் நியூஸ்ல சொல்றாங்க. எங்களை மாதிரியான ஸ்டூடன்ட்ஸ் பணம் கொடுக்கிறதையும் டி.வி-யில பார்த்தோம். எங்களால முடிஞ்ச உதவியை நாங்களும் செஞ்சியிருக்கோம். சீக்கிரமா எல்லோரும் நல்லாகிடணும். யாருக்கும் எதுவும் ஆகக்கூடாதுனு சாமிகிட்ட வேண்டிக்கிறோம்’’ என்றன அந்த மழலைக் குரல்கள்.

நல்லெண்ணங்கள் நற்செயல்களாகட்டும்!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2T0Iy3I
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*