தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துவருவது ஒருபுறம் இருந்தாலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் வரும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கு திண்டுக்கல் மாவட்டம் விதிவிலக்கு அல்ல. மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 400’ஐ நெருங்குகிறது. சராசரியாக 10 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றனர். 2,500’ற்கு மேற்பட்டோர் சிசிச்சையில் உள்ளனர்.
Also Read: திண்டுக்கல்: `உங்க தோட்டத்தில தங்கப்புதையல் இருக்கு’ - ரூ.22 லட்சம், 45 பவுன் நகை சுருட்டிய ஜோதிடர்
திண்டுக்கல் அரசு பொதுமருத்துவமனைக்கு நாள் தோறும் வரும் பொதுமக்கள் அதிகரித்துள்ளனர். கொரோனா பரிசோதனை ஆரம்பித்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இடம் கிடைக்காமல் காத்திருப்பவர்கள் வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது மருத்துவமனை. இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பத்திரிகையாளரின் உடல் சுமார் 6 மணி நேரம், சிகிச்சை வார்டின் தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: `கலெக்டர் ஆபீஸ் வரை செலவு இருக்கு’ - ரேஷன் அட்டை வழங்க வெளிப்படையாக லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்ட்
சிகிச்சை பலனின்றி பத்திரிகையாளர் இறந்த நிலையில், அவரது உடலை அவர் சிகிச்சை எடுத்துவந்த கட்டிலின் அருகே தரையில் கிடத்திவிட்டு, வேறொரு நபர் அந்த கட்டிலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இறந்த நபரின் உடலை சிகிச்சை வார்டில் இருந்து பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கு எடுத்துச்செல்ல 6 மணி நேரம் ஆகியுள்ளது. ’மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறை தான் இதற்கு காரணம். கூடுதல் பணியாளர்களை நியமிப்பது அல்லது தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.’ என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு பணியாளர்களைக் கூடுதலாக நியமிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2QupXMn
via
