கோவை ஸ்பாட் விசிட்: உருவாகும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் - நிவர்த்தியாகுமா தேவை?

0

இந்தியா முழுவதும் உச்சரிக்கும் ஒற்றைச் சொல்லாக மாறியிருக்கிறது ஆக்ஸிஜன். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் பேரிடியாய் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் மூச்சு விட திணறிக் கொண்டிருக்கின்றனர்.

ஆக்ஸிஜன்

Also Read: கோவா: ஆக்ஸிஜன் பற்றாக்குறை; மேலும் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! - 4 நாளில் 75 பேர் மரணம்?!

இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டி.ஆர்.டி.ஓ மூலம் பி.எம் கேர்ஸ் நிதியில் நாடு முழுவதும் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதற்கான பணியில் நாடு முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதன்படி, கோவை கே.என்.ஜி புதூர் அருகே உள்ள ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ் (Trident Pneumatics) நிறுவனமும் இந்த ஆக்ஸிஜன் நிலையம் அமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணிகள் எப்படி நடக்கிறது என்பதை அறிய அங்கு நேரடியாக சென்றோம்.

ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ்

முழு ஊரடங்குக்கு மத்தியிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ் வளாகம். பெரிய பெரிய ஆக்ஸிஜன் இயந்திரங்களை உருவாக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் சுரேஷ் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் காற்றிலுள்ள ஈரப்பதத்தைப் பிரிப்பது, நைட்ரஜன், ஆக்ஸிஜன் பிரிப்பது ஆகிய பணிகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் ஏற்கெனவே டி.ஆர்.டி.ஓ உடன் இணைந்து சில திட்டங்களில் பணியாற்றியுள்ளோம். கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை இங்கு நிவர்த்தி செய்ய முடியவில்லை.

சுரேஷ்

மேற்கத்திய நாடுகளில் ஆக்ஸிஜனை மூன்று விதமாக பராமரிப்பார்கள். அதன்படி சிலிண்டர் ஆக்ஸிஜன், திரவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். காற்றில் ஆக்ஸிஜன், நைட்ரஜன் இரண்டுமே இருக்கும்.

நாம் அமைக்கும் இந்த உற்பத்தி நிலையங்கள் காற்றில் உள்ள ஈரப்பதம், நைட்ரஜன் ஆகியவற்றைப் பிரித்து ஆக்ஸிஜனை மட்டும் அந்த பைப் கனெக்ஷன் மூலம் நோயாளிகளுக்கு செலுத்தும். இதன் மூலம், அந்தந்த மருத்துவமனைகளுக்கான தேவையை அவர்களே நிவர்த்தி செய்து கொள்ள முடியும். தற்போது நாடு முழுவதும் 550 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

ஆக்ஸிஜன்

நாங்கள் 53 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கிக் கொடுக்க உள்ளோம். இது இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்குச் செல்லும். இப்போதுவரை டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட ஐந்து மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை வழங்கியிருக்கிறோம்.

இதுதவிர மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் அரசுகளுக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்துக் கொடுக்க உள்ளோம். ஒரு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க சராசரியாக ரூ.1.25 கோடி செலவாகும். சரியாக திட்டமிட்டால் ஒரு உற்பத்தி நிலையத்தை அமைக்க மூன்று நாள்கள்வரை ஆகும்.

ஆக்ஸிஜன்

நாட்டில் எந்தப் பகுதியாக இருந்தாலும் மொத்தம் 15 நாள்களுக்குள் ஓர் உற்பத்தி நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். இதற்கான மூலப் பொருள்கள் பலவும் வெளிநாடுகளில் இருந்துதான் கிடைக்கும்.

கொரோனா தொற்று வேகமாக இருப்பதால், மூலப்பொருள்கள் கிடைப்பதில் மட்டும் சற்று சவால்கள் இருக்கின்றன. நாம் தயாரிக்கும் 960 lpm ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஒன்று, 222 ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்குச் சமம். பெரிய மருத்துவமனைகள் உற்பத்தி நிலையங்களைப் பயன்படுத்தும்போது, சிறிய மருத்துவமனைகள் சிலிண்டர்களைப் பயன்படுத்த முடியும்.

ஆக்ஸிஜன்

எனவே, இது பயன்பாட்டுக்கு வந்த 3-4 மாதங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை படிப்படியாக குறையும் நிலை உருவாகும்" என்றார் உறுதியான குரலில்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RcAWux
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*