தமிழகம் வந்தடைந்த முல்லைப் பெரியாறு நீர்; 14,000 ஏக்கர் விவசாய நிலத்துக்கு பாசன வசதி!

0

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த சில வருடங்களாக அணையில் நீர் இருப்பு குறைவு காரணமாகக் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதியிலும், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதியிலும், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதியிலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதியிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கோடை மழை கை கொடுத்ததாலும் அணையின் நீர் மட்டம் 131 அடியை எட்டியதாலும் முதல் போகப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

முல்லைப் பெரியாறு

இந்நிலையில் இந்த ஆண்டு, அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, நீர் இருப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து இன்று முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 200 கன அடி நீர்ப் பாசனத்துக்கும், தேனி மாவட்ட குடிநீர்த் தேவைக்காக 100 கன அடி வீதமும் தண்ணீர் 120 நாள்களுக்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரைத் திறந்து வைத்த அமைச்சர்

இன்று காலை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று தண்ணீரைத் திறந்து வைத்தார்.

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 14,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2RTI5QK
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*