கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல் டோனிக்(22). இவருக்கும் வாணிய குடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் போனிலும், நேரிலும் சந்தித்தும் பேசுவது வழக்கம். இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என மாணவியிடம் ஆல்டோ மைக்கேல் டோனிக் கூறியுள்ளார். இதையடுத்து ஆல்டோ மைக்கிள் டோனிக் கடந்த சில தினங்களுக்கு முன் மாணவியை நாகர்கோவில் அருகேயுள்ள உலக்கை அருவி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டில் வைத்து மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் காலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற மகள் இரவு ஆன பின்வும் வீடு திரும்பாததால் அந்த மாணவியின் தாய் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளார். எங்கும் மகளை காணாததால் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். துரிதமாக விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீஸார் உலக்கை அருவி பகுதியில் மாணவி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அங்கு சென்ற போலீஸார் மாணவியை மீட்டதுடன், அவரை அழைத்துச் சென்ற ஆல்டோ மைக்கேல் டோனிக்கை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மாணவிக்கு 18 வயது நிறைவடையாததால், சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஆல்டோ மைக்கிள் டோனிக் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆல்டோ மைக்கேல் டோனிக்குக்கு உலக்கை அருவியில் வீடு எடுத்துக் கொடுக்க உதவிய அவரது நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் சூர்யா என்பவரின் தாத்தாவின் வீட்டில் மூன்று நாட்களாக ஆல்டோ மைக்கேல் டோனிக்கும், மாணவியும் தங்கியிருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நால்வரும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பிளஸ் 1 மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை கொடுத்தவரும், அதற்கு உதவிய நண்பர்களும் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/353xs0k
via
