மதுரை: அணு ஆராய்ச்சி மைய பணிக்கான தேர்வு... விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

0

அணு ஆராய்ச்சி மையப் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதியை தள்ளி வைக்கும்படி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்று உடனே விண்ணப்பிக்கும் கடைசித் தேதியை தள்ளி வைத்த நிகழ்வு விண்ணப்பிக்காத மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு

இது பற்றி சு.வெங்டேசனிடம் பேசினோம். "கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பணி நியமனத் தேர்வு நடத்துவதாக அறிவித்திருந்தது. அதற்கு விண்ணப்பிக்க கடந்த 3-ம் தேதியை கடைசி தேதியாக அறிவித்திருந்தது.

கொரோனா ஊரடங்கால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமாகிவிட்டது. அதனால் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்கள்களும் என்னை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார்கள்.

3-ம் தேதி கடைசி நாள் என்பதால் இனி தாமதிக்க கூடாது என அன்று இரவு 11 மணிக்கு கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநருக்கு மெயில் அனுப்பினேன்.

அதோடு மட்டுமில்லாமல் எம்.பி அலுவலகத்திலிருந்து இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் பேசினோம்.

மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட என் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜூன் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன்

குறுகிய நேரத்தில் என்னுடைய கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்த இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்." என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3v2FS2Z
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*