பட்டுக்கோட்டை : பறிமுதல் செய்த மது பாட்டில்கள் விற்பனை; இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீஸ் சஸ்பெண்ட்!

0

பட்டுக்கோட்டை அருகே உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறு ஒரு நபருக்கு கூடுதல் விலைக்கு விற்று முறைகேட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த ஊர்

இது தொடர்பான தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்ற நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் உண்மையென தெரியவர இதில் ஈடுபட்ட நான்கு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம்,திருச்சிற்றம்பலம் பகுதியில்,சட்டத்திற்கு விரோதமாகப் மதுப்பாட்டில்கள் பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்துகொண்டே இருந்தன.இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் போலீஸார் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.கடந்த மே மாதம் 8ம் தேதி மதுப்பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரிடமிருந்து 434 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து முறையாக வழக்கு பதிவு செய்யவில்லை.மேலும் மது விற்றவரையும் கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி விட்டனர்.இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை, சம்மந்தப்பட்ட போலீஸ் வேறொரு தனி நபரிடம் கூடுதல் விலைக்கு விற்று மது விற்பனையை ஊக்கப்படுத்தியுள்ளனர்.பின்னர் அந்த பணத்தை நான்கு போலீஸார் பங்கு பிரித்து கொண்டனர்.

போலீஸ் ஸ்டேஷன்

இந்த தகவல் அப்போதிலிருந்தே அரசல் புரசலாக வெளியே கசிந்தது.மேலும் இது தொடர்பான புகார்களும் வந்து கொண்டே இருந்தன.இதையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொள்ள தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.,பிரவேஷ் குமார்,உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார்.முதலில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தது மற்றும் அதனை ஸ்டேஷனில் வைத்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததற்காக ஆதாரங்கள் திறட்டப்பட்டன.இதற்கு சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் பெரும் உதவியாக இருந்தது.

பின்னர் போலீஸார் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்தது உண்மையென தெரிய வந்தது.அதன் அடிப்படையில், டி.ஐ.ஜி.,பிரவேஷ் குமாரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,திருச்சிற்றம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்த இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி,சப்– இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன்,எஸ்.எஸ்.ஐ., துரையரசன், ஏட்டு ராமமூர்த்தி ஆகியோரை, டி.ஐ.ஜி.,பிரவேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.குற்றச் செயலை தடுக்க வேண்டிய போலீஸாரே இப்படி நடந்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றனர். பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேசனிடம் பேசினோம், "பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது விசாரணையில் ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்தது.அதன் பேரில் நான்கு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சமரசமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு இதுவே சான்று" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ipcz7P
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*