மீண்டும் ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா வனிதா விஜயகுமார்... கொல்கத்தாவில் நடந்தது என்ன?

0

நடிகை வனிதா விஜயகுமாருக்கும், வட இந்தியாவைச் சேர்ந்த விமான பைலட் ஒருவருக்கும் திருமணம் நடந்திருப்பதாக அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பேசினேன். ‘’ஆமாங்க... அவர் வட இந்தியாவைச் சேர்ந்த பைலட். மாசத்துல ரெண்டு மூணு தடவைதான் சென்னைக்கு வருவார். மத்தபடி ஃபிளைட்ல பறந்துட்டே இருக்கிறவர். வனிதாவுக்கு எப்படி எங்க அறிமுகமானார்னு தெரியலை. ஆனா, சந்திச்ச சில நாள்கள்லயே ரெண்டு பேருக்குமிடையில் ஒரு புரிதல் உண்டானதா சொல்றாங்க. ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டதால, கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்ததா தெரியுது. கொல்கத்தாவுல இருக்கிற காளி கோயில்ல வச்சு கல்யாணம் நடந்திருக்கு.

வனிதா

தன்னுடைய வாழ்க்கையில மறைக்க எதுவுமே இல்லைனு ஓப்பனா பேசற வனிதா, இந்த விஷயம் பத்தி ஏன் இதுவரைக்கும் பேசலைன்னு தெரியலை" என்கிறார்கள்.

கொரோனா லாக்டௌன் தொடங்கும் முன்பாக வனிதா மாலத்தீவு சென்று வந்தார். "அந்தப் பயணத்திலுமே அவருடைய பைலட் கணவர் உடன் இருந்தார்" என்கின்றனர். "இப்ப அவங்க கழுத்தில் கறுப்பு நிறத்தில் மணி போன்ற ஒரு செயின் இருக்கும். அது அந்த மாப்பிள்ளை அவர் குடும்ப வழக்கப்படி கட்டிய தாலிதான்" எனச் சொல்கிறார்கள்.

உண்மையிலேயே திருமணம் நடந்ததா, கணவர் யார் என்பதை வனிதா விஜயகுமார்தான் உறுதிபடுத்த வேண்டும்.



from தமிழ் சினிமா https://ift.tt/2RCFWbX
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*