கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கின்றனர், அப்போது புலியூர் காலனியில் மகேந்திரன் என்பவரது வீட்டிற்கு அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய பாகுவை குடித்துவிட்டு தங்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். இரவு 8 மணியளவில் மூன்று பேரும் தங்களது வீடுகளில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
Also Read: கள்ளச்சாராயம் காய்ச்சி `டிக் டாக்' வீடியோ! - தேனியில் சிக்கிய 4 இளைஞர்கள்
அதையடுத்து அவர்களின் பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் மூவருக்கும் முதலுதவி சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அதனையடுத்து அந்த மூன்று மாணவர்களும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்து வைத்திருந்த சாராய பாகுவை குடித்தது உறுதியானது. அதையடுத்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயத்தை காய்ச்சியதாக பூபாலன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fRCZxe
via
