கோவை கொரோனா நிலவரம்: குறையும் பாதிப்பு.. அதிகரிக்கும் மரணங்கள்!

0

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்தாலும், கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா கோர தாண்டவம் குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டிலேயே கோவை தான் முதலிடம். மற்ற பகுதிகளில் பாதிப்பு 2,000-க்கு கீழ் சென்றுவிட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் பாதிப்பு 2,000-க்கு மேல் இருக்கிறது.

கோவை கொரோனா

Also Read: கோவை:`நாங்கதான் தடுப்பூசிக்கு டோக்கன் கொடுப்போம்' - திமுக-வினர் அட்ராசிட்டி; மக்கள் அவதி

நேற்று மட்டும் கோவையில் புதிதாக 2,319 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் கோவையில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்தாலும், உயிரிழப்பில் சென்னைதான் முதலிடத்தில் இருந்து வந்தது.

ஆனால், கடந்த இரண்டு நாள்களாக உயிரிழப்பிலும் கோவை தான் முதலிடம். நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் 44 பேர் உயிரிழந்தனர். சுகாதாரத்துறை அறிவிப்பின்படியே, கோவையில் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான். தற்போதுவரை கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,638 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை

கடந்த இரண்டு நாள்களாக கோவையில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக 94 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையிலும் கோவைதான் முதலிடம். தற்போதுவரை, கோவையில் 24,022 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் கொரோனா பாதிப்பு 22 சதவிகிதம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை

ஆனால், இப்போதும் நிலைமை முழுவதும் சீராகவில்லை. எனவே, கோவை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3v8lBsD
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*