Exclusive : ‘’விஷால் பிரச்னை ஒரு பிஸ்கோத்து மேட்டர்'’ - தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி

0

மீண்டும் ஒரு விஷால் பஞ்சாயத்து! லாக்டெளன் காரணமாக சில மாதங்களாக செய்திகளில் இடம்பிடிக்காத விஷால், இப்போது மீண்டும் செய்தியாகியிருக்கிறார். கடந்த முறை அலுவலக பெண் ஊழியர் பண மோசடி செய்தார் என போலீஸில் புகார் செய்த விஷால், இந்தமுறை மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது குற்றம்சாட்டியிருக்கிறார்.

‘இரும்புத்திரை’ படத்துக்காக ஆர்.பி.செளத்ரியிடம் ஃபைனான்ஸ் வாங்கியிருக்கிறார் நடிகர் விஷால். இந்த கடனுக்கு உத்தரவாதமாக வீட்டுப்பத்திரங்கள் உள்பட சில ஆவணங்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திவிட்டதாகவும், ஆனால், அதன்பிறகும் ஆவணங்களைத் திருப்பிக் கொடுக்கவில்லையென்றும் தியாகராய நகர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார் விஷால்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் பேசினேன். ‘’கொச்சைத்தமிழில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு பிஸ்கோத்து மேட்டர். ‘இரும்புத்திரை’ படத்துக்காக என்னிடமும் திருப்பூர் சுப்ரமணியத்திடமும் ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார் நடிகர் விஷால். பணம் வாங்கும்போது அதற்கு உத்திரவாதமாக டாக்குமென்ட்ஸ் சிலவற்றை கொடுத்திருந்தார். திருப்பூர் சுப்ரமணியத்தின் கொடுக்கல், வாங்கல் விஷயங்களை எல்லாம் இயக்குநர் சிவக்குமார் (அர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்) பார்த்துவந்தார். எல்லா பத்திரங்களையும் திரூப்பூர் சுப்ரமணியம் இவரிடம்தான் கொடுத்துவைப்பார்.

இந்நிலையில்தான் திடீரென சிவக்குமார் மாரடைப்பால் இறந்துவிட்டார். அவரிடம் இருந்த விஷால் தொடர்பான டாக்குமென்ட்ஸ் இப்போது எங்கிருக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால், ‘இரும்புத்திரை’ படத்துக்காக வாங்கிய கடன் எல்லாம் அடைத்தாகிவிட்டது, எங்களுக்குள் எந்த நிலுவையும் இல்லை என விஷாலுக்கு கையெழுத்துப்போட்டு எழுதி கொடுத்துவிட்டோம். ஆனாலும், விஷால் பயப்படுகிறார். நாளைக்கு அந்த பத்திரங்களை வைத்துக்கொண்டு ஏதாவது செய்வார்களோ என நினைக்கிறார். உண்மையில் அந்தப் பத்திரங்கள் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. இதுதான் உண்மை. இதில் ஒரு பிரச்னையும் இல்லை. இப்போது வெளி ஊரில் இருக்கிறேன். சென்னை வந்ததும் இது தொடர்பாக பேசி பிரச்னைகளை சரிசெய்து விடலாம்'’ என்றார் ஆர்.பி.செளத்ரி.



from தமிழ் சினிமா https://ift.tt/2TfYRtC
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*