நள்ளிரவில் நடுக்கடலில் பற்றி எரிந்த மீன்பிடிப் படகு! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 14 மீனவர்கள்

0

கன்னியாகுமரியைச் சேர்ந்த சகாய ஆண்டனி என்பவர் அவரது மனைவி வினோ என்பவரின் பெயரில் இயந்திர மீன்பிடி படகு (பதிவு எண் 314) மூலம் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இயந்திரப் படகு மூலம் மீனவர்கள் சேர்ந்து ஆழ்கடலுக்குச் சென்று தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். .

தீப்பிடித்து எரியும் படகு

வழக்கம் போல, சின்ன முட்டம் பகுதியில் இருந்து 14 மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு படகு சென்றிருக்கிறது. படகை செபஸ்தியான் என்பவரின் மகன் ஞானசெல்வம் (வயது 49) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். ஆழ்கடலில் நிறைய மீன்கள் கிடைத்த நிலையில், படகில் இருந்தவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கரைக்கு படகு வந்து கொண்டிருந்தபோது திடீரென படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரத்தின் ரேடியேட்டரில் ஏற்பட்ட கோளாற்றைச் சரிசெய்ய அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், படகு திடீரென தீப்பற்றிக் கொண்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

Also Read: `அந்த விபத்து என் பார்வையை மாத்திடுச்சு!' - ஆதரவற்றோருக்கு முடி வெட்டிவிடும் நெல்லை தொழிலதிபர்

படகில் பற்றிய தீயை அணைக்க முடியாத அளவுக்கு காற்றின் வேகம் அதிகம் இருந்திருக்கிறது. அதனால் தி வேகமாகப் பரவியதால் படகில் இருந்த மீனவர்கள் உயிர் தப்புவதற்காக உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

நள்ளிரவு நேரத்தில் நடுக்கடலில் படகு தீப்பற்றி எரிவதை, கடகுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் பார்த்ததும் உதவிக்காக படகுகளில் அருகில் சென்றுள்ளனர். அப்போது தீப்பற்றிய படகில் உயிருக்காகப் போராடிய 14 மீனவர்களை போஸ்கோ என்பவரது படகில் ஏற்றி கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

படகு விபத்தில் உயிர் தப்பிய மீனவர்கள்

நடுக்கடலில் பற்றி எரிந்த அந்த இயந்திர படகு, சின்ன முட்டம் பகுதியில் இருந்து 4 கடல் மைல் தொலைவில், கூடங்குளம் மற்றும் பஞ்சல் ஆகிய இடங்களுக்கு இடையே கடலுக்குள் எரிந்து மூழ்கிவிட்டது. ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான படகு தீப்பற்றி எரிந்து கடலுக்குள் மூழ்கியதால் மீனவர்கள் வருத்தம் அடைந்த போதிலும் 14 பேர் உயிர் தப்பியதால் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fvH8q7
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*