கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், கோவை மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, மாநகராட்சிப் பகுதியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.
Also Read: `சார்பட்டா' கபிலனாக மாறிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; அசத்தல் பர்த்டே பேனர்கள்! #VikatanPhotoStory
கொரோனாவைக் கட்டுப்படுத்தப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.
பா.இரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்தப் படத்தின் ஒரு பகுதியை மீம்ஸாக வைத்து கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது கோவை மாநகராட்சி நிர்வாகம்.
இது குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நமக்கு மாரியம்மாள்களும், பாக்கியம்களும் அதிகமாக தேவைப்படுகின்றனர்’ என்று படத்துடன் ஒரு ட்வீட் போட்டுள்ளனர்.
`சார்பட்டா’ படத்தில் கதாநாயகி துஷாரா, மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல ஆர்யாவின் அம்மாவாக அனுபமாகுமார், பாக்கியம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தன.
ஆர்யாவை, `வீட்டைவிட்டு வெளியில் போகாதே’ என்று அவர்கள் சொல்வதைப்போல,கொரோனா பரவுவதால் நம் வீடுகளிலும் வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்த அவர்களைப் போன்ற பெண்கள் வேண்டும் என்பதைத்தான் மாநகராட்சி ட்வீட் மூலம் கூறியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ilq9IR
via
