“நான் 2019-ம் ஆண்டில் இருந்து சொல்லி வருகிறேன். இது வாளையார் எல் அண்ட் டி டோல்கேட். ஆள் இல்லாத டோல்கேட்டில் என்ட்ரி விழுந்து கொண்டிருக்கிறது. ஒருமுறை சென்றால் பலமுறைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் உங்கள் அலுவலகம் வந்து முறையிட முடியுமா..? எப்போது சரி செய்வீர்கள்..?”
Also Read: `தூத்துக்குடி துறைமுகத்தின் ஆண்டு வருமானம் ரூ.600 கோடி வரை குறைய வாய்ப்பு!’ - சுங்க ஆணையர் தகவல்
என்று பொதுமக்களில் ஒருவர், எல் அண்டி டி பைபாஸ் சுங்க சாவடி அதிகாரிகளை சரமாரியாக கேள்வி எழுப்புகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம் மதுக்கரை முதல் அவிநாசி சாலை நீலம்பூர் வரை சுமார் 30 கி.மீ தொலைவுக்கு எல் அண்ட் டி நிறுவனம் பைபாஸ் சாலை அமைத்தது. இந்தப் பாதையில் ஆறு சுங்க சாவடிகள் உள்ளன. ”ஒவ்வொரு முறை அந்த சுங்க சாவடியை கடக்கும்போது, குறைந்தது 2 முதல் 4 என்ட்ரிகளுக்கான பணத்தை எடுத்துவிடுகின்றனர்.
கேரளா செல்வதற்கு இதுதான் முக்கிய பாதை. ஒருநாளுக்கு லட்சணக்கான வாகனங்கள் இந்த வழியை கடக்கின்றன. கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கின்றனர்” என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
வைரலான அந்த வீடியோவில் பேசும் நபருக்கு மட்டுமே 2,000 ரூபாய் வரை பாக்கி இருப்பதாக கூறுகிறார். என்ட்ரியை கவனிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து, எல் அண்ட் டி ஊழியர்களிடம் கேட்டால், “சாப்ட்வேர் பிரச்னை. பணம் கொடுத்துவிடுகிறோம்” என்று கூறுகின்றனர்.
ஆனால், பலர் எவ்வளவு பணம் எடுக்கின்றனர் என்பதை சரியாக கவனிப்பதில்லை. லாரி ஓட்டுநர்கள், கால்டாக்ஸி ஓட்டுநர்கள் என்று பலரும் இந்த விஷயத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.
இதுகுறித்து எல் அண்ட் டி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது, ”நெட்வொர்க் பிரச்னையால் வாகனங்கள் கடக்கும்போது கூடுதலாக பணம் எடுக்கப்படுகிறது. விரைவில் இந்த பிரச்னை சரியாகிவிடும். வீடியோவில் பேசும் அந்த நபரும் சமாதானமாகிவிட்டார்.
கூடுதல் கட்டணம் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவர்களுக்கு பணம் திருப்பியளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2UvZ1hs
via
