40 லட்சம் ரூபாய் வரி கட்டிய விஜய், தனுஷ்... BEAST படத்தின் சர்ப்ரைஸ் என்ன?

0

முடிவுக்கு வந்திருக்கிறது கோலிவுட்டின் ரோல்ஸ்ராய்ஸ் பஞ்சாயத்து. நடிகர்கள் விஜய், தனுஷ் இருவருமே சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர். சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் நடிகர் விஜய்யை நீதிபதி காட்டமாக விமர்சித்தத்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. நடிகர் விஜய், அவரைத் தொடர்ந்து தனுஷ் இருவருமே நுழைவு வரிகட்டுகிறோம் எனச் சொல்லி தற்போது முழுமையாக வரியை கட்டி வழக்கை முடித்திருக்கிறார்கள்.

விஜய், தனுஷ் இருவருமே ஏற்கெனவே பாதி வரியை கட்டியிருந்ததால் தற்போது கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் நுழைவு வரியை கட்டியிருக்கிறார்கள்.

இதற்கிடையே விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவுகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்தோம்.
செல்வராகவன் (சாணி காயிதம் படத்தில்)

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் 'பீஸ்ட்' படத்தின் நடிகர்கள் பட்டியலில் சமீபத்தில் செல்வராகவனும் இணைந்தார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்தது. படத்தில் விஜய்க்கு வில்லனே செல்வராகவன்தான் என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் 'பீஸ்ட்'டில் இப்போது தனுஷும் நடிக்கப் போகிறார் என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது. '' 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே இப்படிப் பேசுகிறார்கள். இப்போது செல்வராகவன் நடிப்பதால், அந்தப் பேச்சு இன்னும் வலுவாகியிருக்கு. இப்போது தனுஷ் 'மாறன்', மித்ரன் ஜவஹர் படங்களில் பிசியாக இருக்கிறார். அதனால விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க வாய்ப்பில்லை'' என்கிறார் தனுஷுக்கு மிக நெருக்கமான நண்பர்.

ஆனால், விஜய் படத்துக்கு பொயட்டு தனுஷ் பாடல் எழுதி, பாடலாம்ல?



from தமிழ் சினிமா https://ift.tt/2VKc8vt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*