டீ முதல் டிபன் வரை..! - ரெய்டுக்கு வேலுமணி தயாரானது எப்படி?

0

'தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு வேலுமணி தான் முதலில் கைது செய்யப்படுவார்' சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு வேலுமணியும் ரெய்டுக்கு தயாராகிவிட்டார். எம்.ஆர். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தபோது கூட, 'முதலில் என் வீட்டுக்கு வருவார்கள் என்றுதான் நினைத்தேன். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்' என்று வேலுமணி கூறியிருந்தார். 2018-ம் ஆண்டு முதல் எழுந்துள்ள இந்தப் புகாருக்கு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டுக்கு தயாராவதற்கு முன்பே வேலுமணி தயாராகிவிட்டார் என்கிறார்கள் கோவை அ.தி.மு.க வினர்.

கடந்த சில வாரங்களாகவே வேலுமணி, வழக்கறிஞர் அணி துணையுடன் தான் வலம் வந்தார். சமீபத்தில் கோவை அ.தி.மு.க தலைமை அலுவலக வளாகத்தில் வழக்கறிஞர் அணிக்கு என்று தனியாக ஓர் அலுவலகத்தை திறந்து கொடுத்தார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அங்கு அடிக்கடி வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டத்தை நடத்தி வந்தனர். ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வழக்கறிஞர் இன்பதுரைதான் இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கிறார். “ஸ்டாலின் இவர் மீதுதான் கோபமாக இருக்கிறார். எப்ப வேண்டுமானாலும் ரெய்டு வரலாம். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று அப்போது முதலே ரெய்டை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

வேலுமணியும் செல்லும் கூட்டங்களில் எல்லாம், 'நாம் எல்லோரும் சேர்ந்து இதை எதிர்கொள்ள வேண்டும். சிறை செல்லவும் தயாராக இருங்கள்' என்று கூறியிருந்தார். ரெய்டு தொடங்கியவுடனே, தனது ஆதரவாளர்களை குவித்து போராட்டம் நடத்தி மாஸ் காட்டுவதை தனி திட்டமாக வைத்திருந்தனர். இன்று காலை ரெய்டு தொடங்கியவுடன் கோவை முழுவதும் இருந்து அ.தி.மு.க-வினர் வேலுமணி வீடு மற்றும் சந்திரசேகர் வீடுகளின் முன்பு குவிய தொடங்கினர். 'எங்க வேலுமணி அண்ணன் சிங்கம். அவர் கோவையின் தங்கம்.. அவர்மீது கை வைத்தால் தமிழகம் தாங்காது' என்று கோஷம் எழுப்பினர்.

அ.தி.மு.க-வினரை கட்டுப்படுத்த ஏராளமான போலீஸாரை குவித்து பேரிகார்டு போட முயற்சித்தனர். ஆனால், போலீஸார் கொண்டுவந்த பேரிகார்டை முட்டித்தள்ளி அ.தி.மு.க-வினர் வாக்குவாதம் செய்தனர். அங்கு கூடியிருந்த அ.தி.மு.கவினருக்கு 9 மணியளவில் தண்ணீர், டீ, காபி பிஸ்கெட் கொடுத்தனர். அதன்பிறகு பொங்கல், வடை, தோசை என்று விதவிதமான டிபன் வகைகள் வழங்கப்பட்டன. டிபன் கொடுக்கும்போதே, ' மதியத்துக்கு கலவை சாதம் ரெடியாகிட்டு இருக்கு.. என்ன சாப்பாடு வேண்டும்?' என்று ஆர்டர் வேறு எடுத்தனர்.

Also Read: `மொத்தம் 100 பேருக்கு குறி!’ - எஸ்.பி வேலுமணி ரெய்டு பின்னணி..!

இரவு வரை ரெய்டு தொடர்ந்தால், மேலும் பல தொண்டர்களை இறக்கி மாஸ் காட்டுவோம் என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AkN3qa
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*