ஆரணி: கட்டுப்பாட்டை இழந்த கார்; லாரி மோதி விபத்து; கைக்குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!

0

வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இன்று மதியம், காரில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதூரிலுள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர். வேலூர்- கடலூர் சாலையில் அதிவேகமாக கார் சென்றபோது, ஆரணிக்கு அருகில் முனிவந்தாங்கல் கூட்ரோட்டில் காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் மீது எதிரே வந்த கனரக லாரி மோதியது. இதில், கார் நொறுங்கி சேதமடைந்தது. இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த கைக்குழந்தை உட்பட 6 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முனியம்மாள் (60), ராதிகா (45), கோமதி (26), பரிமளா (21) ஆகிய நான்கு பெண்கள், மூர்த்தி என்ற 60 வயது முதியவர், 3 மாத பெண் குழந்தை நிஷா ஆகிய 6 பேரும்தான் உயிரிழந்தவர்கள்.

Also Read: நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்து; பெண் இன்ஜினீயர் பலி - 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

விபத்தில் நொறுங்கிய கார்

மேலும், இவர்களுடன் பயணித்த கலா (36), பூர்ணிமா (35), மாலதி (27), கார் ஓட்டுநர் சசிகுமார் (25) மற்றும் மூன்று வயது ஆண் குழந்தை குமரன் ஆகிய 5 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சிகிச்சைக்காக இவர்கள், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்துவந்த சந்தவாசல் போலீஸார், 6 பேரின் உடல்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முன்னதாக சம்பவ இடத்தில், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி பவன்குமார், ஆரணி கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சம்பவம், அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xEVnz7
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*