கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் சுகதார பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்பிரபுசங்கர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார் வழங்கினார்.
Also Read: கரூர்: நிலப் பிரச்னை; இருதரப்பு மோதல்! - தடுக்கப்போன முதியவருக்கு நேர்ந்த துயரம்
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா இல்லாத கரூரை உருவாக்கும் நோக்கில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றிமைக்காக செவிலியர் மற்றும் சுகதார பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். அதன்பிறகு, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும்போது,
”`கொரோனா இல்லா கரூர்' என்ற மாபெரும் இயக்கத்தை கரூர் மாவட்ட நிர்வாகம் தனது கையில் எடுத்து, அதனை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க, அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்ட்டது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில், மாபெரும் கையெழுத்து இயக்கம், உள்ளிட்ட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்தில் கொரோனா இல்லா கரூரை உருவாக்கும் நோக்கில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தோகைமலை வட்டாரம் ஆர்ச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம் வட்டாரம் மேலமாயனூர், கரூர் வட்டாரம் கிழக்கு தவுட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, தாந்தோணி வட்டாரம் ஆண்டாங்கோவில், கடவூர் வட்டாரம் வரவணை, சங்கிபூசாரியூர், காணியாளம்பட்டி ஆகிய 7 கிராம பகுதிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. செவிலியர்கள் மற்றும் சுகதார பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா தடுப்பு பணிகளில் தங்களது உயிரை துச்சமென பணயம் வைத்து போராடி வரும் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கரூர் மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுகதார பணியாளர்களை இப்பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2XeUKzW
via
