கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். அவர் திருமண தகவல் மையத்தில் வேலை செய்து வருகிறார். அதன் உரிமையாளர் உட்பட சிலர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எட்டுபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் தரப்பில் விசாரித்தோம். போலீஸார் கூறுகையில், "மார்த்தண்டம் அருகே உள்ள ஒரு பெண் கணவனை பிரிந்து வாழ்ந்துவருகிறார். அவர் ஜெபர்சன் என்பவர் நடத்தி வந்த திருமண தகவல் நிலையத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். அந்த பெண்ணை திருமண தகவல் நிலைய உரிமையாளரான ஜெபர்சன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமில்லாது அந்த பெண்ணுடன் தனியாக இருந்தைத ஜெபர்சன் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ஜெபர்சன்.
அதுமட்டுமல்லாது ஜெபர்சன் நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணியில் உள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்த நிலையில், அவரது நண்பர்களும் அந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதில் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன், திருவட்டாறு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜான் பிரைட் கென்சிலின் ஜோசப், கலிஸ்டர் ஜெபராஜ் உள்பட எட்டுபேர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த பெண் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் போலீஸார் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் திருமண தகவல் மையம் நடத்திய ஜெபர்சன் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகும் அந்த பெண் போலீஸாரிடம் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் போலீஸாரோ, ``நீ புகார் அளித்ததால்தான் ஜெபர்சன் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி புகார் அளித்திருக்கிறார்'' எனக்கூறியிருக்கின்றனர். மேலும், ஜெபர்சன் மரணத்துக்கு அந்த பெண்தான் காரணம் என்ற ரீதியில் அவரை போலீஸார் மிரட்டியதாகவும், பின்னர் அந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read: பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொல்லை: நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ஆஜர்
மேலும் அவர்களின் மிரட்டல் காரணமாக அந்த பெண் அமைதியாக இருந்துள்ளார். இதற்கிடையில் அருமனையில் நடந்த போராட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதாக கைது செய்யப்பட்ட சம்பவமும். அந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த ஸ்டீபன் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண் மீண்டும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்தே மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fMaAsa
via
