``லஞ்சம் வாங்கிட்டு மணல் வண்டியைப் பிடிக்கலாமா'' போலீஸாரைத் திட்டிய நபர் மீது வழக்குபதிவு!

0

கும்பகோணம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்துட்டு மணல் எடுத்ததாகவும், பணத்தையும் வாங்கிக்கிட்டு தன் வண்டியை பறிமுதல் செய்து தன் மீதும் வழக்கும் பதிவிட்டதாக போலீஸ் ஸ்டேஷன் முன் நின்று போலீஸாரைத் தகாத வார்த்தைகளில் பேசி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 600 கோடி மோசடி புகார்; தலைமறைவாக இருந்த `ஹெலிகாப்டர் சகோதரர்கள்' புதுக்கோட்டையில் கைது!

கும்பகோணம், பந்தநல்லுார் அருகே உள்ள குலசேகரநல்லுார், வடக்குத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா (34). அவர் அப்பகுதியில் உள்ள ஆற்றில் சட்டத்துக்கு விரோதமாக மணல் கடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு பந்தநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாருக்கு மாமூல் கொடுத்து வந்துள்ளாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 வண்டிகள் வரை மணல் கடத்தி வந்ததாகவும், அதற்கு ஒரு வண்டிக்கு ரூ 10,000 வீதம் போலீஸ் தரப்பிற்கு லட்சகணக்கில் பணம் கொடுத்ததாகவும் இளையராஜா கூறியுள்ளார். இந்நிலையில் மணல் கடத்தியதாக இளையராஜா மீது பந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன் அவருக்கு சொந்தமான மூன்று டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதில் கோபமடைந்த இளையராஜா, பந்தநல்லுார் போலீஸ் நிலையத்திற்கு வந்துடன் போலீஸ் குறித்து தகாத வார்த்தைகள் பேசி செல்பி வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் போலீஸாரை தரக்குறைவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், " நான் உங்ககிட்ட சொல்லிதான் மணல் கடத்தினேன் அப்புறம் எதற்காக என் வண்டிகளை பறிமுதல் செய்தீர்கள். போலீஸ் என்னிடம் மணல் ஒட்டாதே என்றால் நிறுத்திக் கொள்கிறேன். நான் கொரோனாவில் இருக்கிறேன் போயிட்டு வந்து உங்களை எல்லாமல் முடித்து விடுகிறேன். நான் நைட் முழுவதும் கண் முழிச்சி, லட்சம் லட்சமாக இன்ஸ்பெக்டர் கிட்ட கொடுத்தேன்" என்பதாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு இளையராஜா

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பந்த நல்லூர் போலீஸ் தரப்பில் பேசினோம், "பந்த நல்லூர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டரே கிடையாது. அருகே உள்ள ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான் இதையும் கவனித்து கொள்கிறார். மணல் கடத்திய வண்டியை பறிமுதல் செய்த கோபத்தில் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.தனக்கு கொரோனா இருக்கிறது இப்ப பேசினா தன்னை எதுவும் செய்ய முடியாது என்பதால் இப்படி செய்துள்ளார்.அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்." என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lAPVLm
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*