பிறப்பிலேயே இதய பிரச்னை; பெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தை; காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்!

0

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 26-ம் தேதி பிறந்தது அந்தப் பெண் குழந்தை. 2 கிலோ எடையில் இந்த உலகத்தை தரிசித்த அந்தக் குழந்தைக்கு, பிறந்து பத்து நாள்களுக்குள்ளாக நம் பெற்றோர் நம்மை வேண்டாம் என்று கைவிட்டுச் செல்வார்கள் என்பது தெரியாது. நாம் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம், மருத்துவர்களின் நமக்கு அரணாக இருக்கின்றனர்; அரசு காப்பகத்தில் சேர்க்கப்படவிருக்கிறோம் என்பதும் புரியாது. தத்தித் தவழ்வதற்குள்ளாக இத்தனை சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் அந்தக் குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

Child- Representational Image

Also Read: தொழிலாளியின் கண்ணும் மூக்கும் சேருமிடத்தில் சிக்கிய இரும்புத்துகள்; அகற்றிய அரசு மருத்துவர்கள்!

என்ன நடந்தது?

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் கமலரத்தினத்திடம் பேசினோம், ``இந்தக் குழந்தையின் பெற்றோர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆண் குழந்தை வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கின்றனர். ஆனால், மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததது. அதுமட்டுமல்ல 2 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை சில நாள்களிலேயே எடை குறைய ஆரம்பித்திருக்கிறது. பரிசோதித்ததில் குழந்தையில் இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில்தான் சிதம்பரத்திலிருந்து குழந்தை இங்கு கொண்டுவரப்பட்டது.

இங்கு நடந்த பரிசோதனையில் ஆக்ஸிஜனுடன் கூடிய ரத்தமும் ஆக்ஸிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாகக் கலந்து குழந்தையின் இதயத்திலிருந்து வெளியேறியது கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் ஆக்ஸிஜன் சாச்சுரேஷனும் 70 முதல் 80 வரையிலான அளவிலேயே இருந்தது. இந்த மருத்துவ தகவல்களையெல்லாம் அறிந்துகொண்ட குழந்தையின் பெற்றோர், குழந்தை பிழைக்காது எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறோம் என்று முறையிட்டனர். பாதி சிகிச்சையில் எப்படி குழந்தையைக் கொடுக்க முடியும்? அறுவை சிகிச்சை செய்தால் குழந்தையைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆகையால் குழந்தைக்கு சிகிச்சை நிறைவு பெறாமல் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டோம்.

Egmore Child hospital

Also Read: கொரோனா: `மீண்டும் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை; 3-வது அலையின் ஆரம்பமா?' - பதில் கூறும் மருத்துவர்

அதன் பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. எங்களுக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு சட்டப்படி செய்ய வேண்டிய நடைமுறைகளையெல்லாம் செய்துவிட்டு அந்தக் குழந்தையை அரசின் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். அந்தக் குழந்தை இப்போது நன்றாக இருக்கிறது. ஓபன் ஹார்ட் சர்ஜரிதான் செய்ய வேண்டும். அதற்கு குழந்தையின் உடல் தயாரனதும். அறுவை சிகிச்சை நடக்கும். அது வெற்றிகரமாக முடிந்தவுடன், குழந்தையை அரசு காப்பகத்தில் சேர்த்துவிடுவோம்." என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xyjgbA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*