ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு: ``போலீஸ் மீதுள்ள புகார் உட்பட அனைத்தும் விசாரிக்கப்படும்" - ஐ.ஜி தகவல்

0

கும்பகோணம் நிதி நிறுவன அதிர்பகள் மோசடி வழக்கில், போலீஸ் மீதும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, "புலன் விசாரணையில் தெரிய வருகிற தகவல் அனைத்து விசாரிக்கப்படும்" என ஆய்விற்காக தஞ்சாவூர் வந்த மத்திய மண்டல ஐ.ஜி.,பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

போலீஸ் டீம் உடன் ஐ.ஜி பாலகிருஷ்ணன்

தஞ்சாவூர் டி.ஐ.ஜி., அலுவலகத்தில், போலீஸ் துறை சார்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை இன்று மத்திய மண்டல ஐ.ஜி.,பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.,பர்வேஷ்குமார், எஸ்.பி.,ரவளி ப்ரியா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது ஐ.ஜி.,பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "கும்பகோணம் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3 பேர் புகார் அளித்துள்ளனர்.

இன்னும் பல புகார்கள் வந்துள்ளன. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பதிவான வழக்கின் அடிப்படையில், முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,பைனான்ஸ் நிறுவன அதிபர் கணேஷ், சுவாமிநாதன் சகோதரர்களை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறோம். மக்கள் இழந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கும், அந்த பணத்தை கணேஷ் எந்தெந்த வழியில், எங்கு வைத்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை வந்த புகாரின் அடிப்படையில், ரூ 20 கோடி ரூபாய்க்கு மேசாடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து வந்த புகார்களில் 15 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது அது தொடர்பாக முதற்கட்ட விசாரணையும் நடந்து வருகிறது.

Also Read: ``எங்களுக்கு ஏழரை சனி நடக்குது''- கூல் 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' டென்ஷனான போலீஸ் டீம்!

விசாரணையின் அடிப்படையில், அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்படும். மோசடி பிரதர்ஸ் வழக்கில், போலீஸ் மீது புகார்கள் எழுந்திருப்பது குறித்த கேள்விக்கு, புலன் விசாரணையில் என்னென்ன தெரிய வருகின்றதோ அவை அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்படும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yB2v0Z
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*