திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள நெக்குந்தி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். வயது 26. இவர், பெங்களூருவில் கட்டுமான வேலை செய்துவருகிறார். தனது உறவினர் மகளான 14 வயது சிறுமியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேசிப் பழகியிருக்கிறார் விக்னேஷ். இந்தச் சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு செல்கிறார்.
Also Read: கட்டாயத் திருமணத்தை நிறுத்திய மாணவி 5 நாள்களில் தற்கொலை; பாதுகாக்கத் தவறியதா அரசு?
குழந்தைத்தனம் மாறாத அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய விக்னேஷ், சில தினங்களுக்கு முன்பு அவரின் தாயிடம் சென்று, ``உங்க மகளைக் கட்டிக்கொடுங்க" என்று கேட்டிருக்கிறார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், ``அவளுக்கு 14 வயசுதான் ஆகுது... சின்னப் புள்ள. உனக்கு வயசு அதிகமா இருக்கு. அதுவும் இல்லாம அவளுக்கு 18 வயசு ஆன பின்னாடிதான் எந்த முடிவையும் எடுப்போம்" என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
வேலை நிமித்தமாக மீண்டும் பெங்களூரு சென்ற விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். சிறுமிக்குக் கட்டாயத் தாலி கட்டும் நோக்கத்துடன் இருந்த அவர், நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்ற நேரம் பார்த்து அவர் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.
தனியாக இருந்த சிறுமியின் கழுத்தில் தயாராகக் கொண்டுவந்திருந்த தாலியைக் கட்டினார். சிறுமி கத்தி கூச்சலிட அக்கம், பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும், விக்னேஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். தகவலறிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், சிறுமியை வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விக்னேஷ் மீது புகாரளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீஸார், விக்னேஷை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lLP76w
via
