பொற்பனைக்கோட்டை அகழாய்வு: வெளிப்பட்ட சங்க கால செங்கல் கட்டுமானம்!

0

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இருக்கும் பொற்பனைக்கோட்டையில் அகழிகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், பாறையில் செதுக்கப்பட்ட குழி, இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான அடையாளங்கள், கோட்டை கொத்தளங்கள் இருந்ததற்கான கட்டுமானங்கள் என ஏராளமான வரலாற்று எச்சங்கள் காணப்படுகின்றன. இங்கு அரசு அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நீதிமன்றம் வரையிலும் சென்று தற்போது தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொற்பனைக்கோட்டை அகழாய்வு

கடந்த ஜூலை 30ம் தேதி துவங்கிய அகழாய்வுப்பணிகளைச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு துவங்கிவைத்தார். மேற்பரப்பு ஆய்விலேயே பானை ஓடுகள், மணிகள், வளையல்கள் என ஏராளமான பொருள்கள் கிடைத்தன. இதற்கிடையே தான் முதல்கட்டமாக 8 மீட்டர் நீள அகலத்தில் 5 இடங்களில் அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. பழங்காலத்தில் பயன்படுத்திய மண் கிண்ணங்கள், கிண்ணங்களின் மேல் மூடி குமிழ், பெண்கள் விளையாடப் பயன்படுத்திய வட்டச் சில் போன்ற சுடுமண் பொருள்கள் கிடைத்தன.

Also Read: புதுக்கோட்டை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்!

இந்த நிலையில்தான் தற்போது பணி நடைபெறும் தென்மேற்கு திசையில் உள்ள ஒரு குழியில் சுமார் இரண்டரை அடி ஆழத்தில் நீர்த்தட கால்வாய் அமைப்பு போன்ற செங்கல் கட்டுமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கட்டுமானம் நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாகச் சங்ககாலத்தில் பயன்பட்டிருக்கலாம். அரண்மனையிலிருந்து வெளியேறும் தண்ணீர் இந்தப் பாதை வழியாக வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

சங்க கால செங்கல் கட்டுமானம்

இதுபற்றி ஆய்வில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் இனியன், "ஆய்வில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் 32 செ.மீ நீளமும், 23 செ.மீ அகலமும் கொண்டு சுடு செங்கல்களைக் கொண்டு கட்டப்பட்ட அமைப்பாக உள்ளது. கொள்ளளவானது அரை அடி இருக்கிறது. தற்போது இந்தக் கால்வாய் 2 அடி நீளத்துக்குத் தெரிகிறது. தொடர் அகழாய்வில் முழுமையான கட்டுமானம் வெளிப்படும். தற்போது வெளிப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்தை வைத்துப் பார்க்கும் போது சங்க கால மக்கள் தண்ணீரை வெளியேற்றவோ, அல்லது வெளியிலிருந்து தண்ணீர் உள்ளே வருவதற்காகவோ இந்தக் கால்வாயினை பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரியவருகிறது. தொடர், ஆய்வில் பல்வேறு சங்ககால கட்டுமானங்கள் வெளிப்பட வாய்ப்புள்ளது" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yQIELd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*