`மிளகு பதப்படுத்தும் மையம்; புவிசார் குறியீடு!' - மகிழ்ச்சியில் கொல்லிமலை மலைவாழ் மக்கள்

0

கொல்லிமலையில் விளையும் மிளகை பதப்படுத்தி வைக்க, ரூ. 50 லட்சத்தில் பதப்படுத்தும் மையம் அமைக்க இருப்பதாக, தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது கொல்லிமலையில் வாழும் மலைவாழ் மக்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

கொடியில் மிளகு

Also Read: ``ஒரு கோடி பனை விதைகளை இலவசமாக கொடுக்கப்போறேன்!" - கரூர் மனிதரின் `பட்ஜெட்' தாண்டிய திட்டம்

இயற்கை வளம் மிக்க கொல்லிமலை இந்தியாவின் தெற்கு பகுதியில், தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல், திருச்சி மாவட்டங்களின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராக உள்ளது. இம்மலை, சுமார் 280 சதுர கி.மீ நிலப்பரப்பும், 5000-க்கும் மேல் உள்ள மக்கள் தொகையையும், 85 கிராமங்களையும் கொண்டது. இங்குள்ள கிராமங்களில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலையில் வாழும் பூர்வகுடிகள், மலைவாழ் மக்கள் என்றும், மலைக்கௌண்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கொல்லிமலையில் பலாப்பழம், அன்னாசி, பேரிக்காய், கொய்யா, மாம்பழம், காஃபி, மிளகு, கொண்டைக்கடலை, சீரகம் என்று பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இருந்தாலும், கொல்லிமலையில் 80 சதவிகிதம் மிளகுதான் பயிரிடப்படுகின்றன.

மிளகு

Also Read: வேளாண் பட்ஜெட்: `பழங்குடிகளும் இனி பயன்பெறுவர்!' - சிறுதானிய பதப்படுத்தும் மையத்திற்கு வரவேற்பு

இந்நிலையில், இங்கு மிளகை பயிரிட்ட விவசாயிகள் அவற்றை அறுவடை செய்த உடனேயே வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் சூழல் இருந்தது. இதனால், வியாபாரிகள் சொல்லும் விலைக்கு விவசாயிகள் மிளகை விற்பனை செய்யும் நிலை இருந்தது. இதனால், கொல்லிமலையைச் சார்ந்த சேந்தமங்கலம் தொகுதியில் களம் காணும் வேட்பாளர்களிடம் இங்குள்ள விவசாயிகள், மிளகுக்கு பதப்படுத்தும் மையம் வேண்டும் என்று கடந்த 20 வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில், அவர்களின் கோரிக்கை, தற்போது பட்ஜெட் அறிவிப்பு வாயிலால நிறைவேறியிருக்கிறது.

இதுகுறித்து, இங்கு விளையும் மிளகை வாங்கி விற்பனை செய்பவரும், விதை சேகரிப்பாளருமான நாமக்கல் `உழவர்' ஆனந்திடம் பேசினோம். ``கொல்லிமலையில் அதிகம் மிளகு விளைகிறது. ஆனால், அதைப் பதப்படுத்தி வைத்து, விற்பதற்கு இங்குள்ள விவசாயிகளுக்கு வழியில்லாமல் இருந்தது. இதனால், இவர்களிடம் மிளகை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று, வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கும் நிலை இருந்தது. டிமாண்ட் ஆக இருக்கும்போது, அதை வியாபாரிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால், மிளகை விளைவிக்கும் மலைவாழ் மக்களுக்கு லாபம் இல்லை. தற்போது, மிளகு கிலோ ரூ. 350 முதல் ரூ. 400 வரை என தரத்துக்கு தகுந்தமாதிரி விற்பனையாகின்றது. நான்கு வருடத்துக்கு முன்னால், மலையியிலேயே ரூ. 800 வரை விற்பனை ஆனது. வியாபாரிகள் அதை கிலோ ரூ. 1000 வரை விலை வைத்து விற்றார்கள்.

'உழவர்' ஆனந்த்

ஆனால், மிளகு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகிறது என்று சொல்லி, தரமான கொல்லிமலை மிளகு விலை குறைந்துபோனது. இந்நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட்டில் கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படுவதாக சொல்லியிருப்பதால், இனி மலைவாழ் மக்கள் அங்கே பதப்படுத்தி, வேண்டிய நேரத்தில் அவர்களால் மிளகை விற்பனை செய்து, நிறைவான லாபத்தை பெறும் வாய்ப்பு ஏற்படும். அதேபோல், கொல்லிமலையில் விளையும் மிளகுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது, கொல்லிமலை மிளகுக்கு சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுத்தரும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sflkEm
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*