நாமக்கல் அருகே ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி ஒருவரை, மோகனூர் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: "வேலை கன்ஃபார்ம்; பணத்தை அனுப்புங்க!"- ரூ.56 லட்சம் மோசடி செய்த குடும்பத்தின் மீது வழக்கு பதிவு!
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் இருக்கிறது அணியாபுரம். இந்தப் பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. கிராமப் பகுதி என்பதால், இரவு நேரத்தில் இங்கு ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில், நேற்றுமுந்தினம், அதாவது 05 - ஆம் தேதி நள்ளிரவு ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து திடீரென சத்தம் கேட்டுள்ளது. அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற மோகனூர் காவல் நிலைய போலீஸார், ஏ.டி.எம் மையத்துக்குள் இருந்து திடீரென வந்த சத்தத்தைக் கேட்டு, அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். ஏ.டி.எம் மையத்துக்குள் யாரும் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால், ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் இருந்து தொடர்ந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. அதனால், சற்று ஜெர்க் ஆன போலீஸார், ஏ.டி.எம் இயந்திரத்துக்குள் எட்டிபார்த்த போது, இயந்திரத்திற்குள் ஒரு நபர் அமர்ந்து பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக அந்த நபரை பிடித்த போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பரளி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அதோடு, அந்த இளைஞர் பீகார் மாநிலம், கிழக்கு சாம்தான் மாவட்டத்தைச் சேர்ந்த பேந்தரா ராய் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக, அந்த இளைஞரை கைது செய்த மோகனூர் காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்து நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர். நள்ளிரவு நேரத்தில் ஏ.எடி.எம் மெஷினுக்குள் அமர்ந்து வடமாநில இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: நள்ளிரவு கனிமவளக் கொள்ளை! - ராத்திரி ரவுண்ட்-அப்
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jtJzed
via
