தூத்துக்குடி: `தெரு நாய்களுக்கு பிஸ்கட்; ஜன்னல் வழியே திருட்டு'- நள்ளிரவில் தொடரும் சம்பவம்!

0

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2 மாதமாக அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

நாய்க்கு பிஸ்கட் போடும் திருடன்

பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்ப்போர் வீடுகளிலும் திருடு போனதுதான் வேடிக்கையாக உள்ளது. ஒரே தெருவில் அடுத்தடுத்த நாட்களில், அடுத்தடுத்த வீடுகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்த நிலையில், திருட்டுச் சம்பவங்கள் நடந்த வீடுகள், அந்த வீடுகளின் பக்கத்து வீடுகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கையில் ஒரு துணிப்பையுடன் தெருவிற்குள் நுழைந்து வீடுகளை நோட்டமிடுகிறார். அவரைப் பார்த்து தெருக்களில் சுற்றும் நாய்கள் குரைக்கின்றன. துணிப்பையில் இருந்தது பிஸ்கட்டை எடுத்துப் போடுகிறார். மீண்டும் வீடுகளை நோட்டமிட்டபடியே நடந்து செல்கிறார். தொடர்ந்து 3 நாள்கள் தெருவிற்குள் நடந்து சென்று நாய்களுக்கு பிஸ்கட் மட்டுமே போட்டுச் செல்கிறார்.

நாய்களை தூக்கிக் கொஞ்சும் திருடன்

Also Read: `8 வருட தொடர் திருட்டு; பூட்டியிருக்கும் கிராமத்து வீடுதான் டார்கெட்’ -பலே திருடன் சிக்கியது எப்படி?

அடுத்தடுத்த நாட்களில் அந்த இளைஞரைக் கண்டதும் நாய்கள் குரைக்கமால் அவர் அருகே சென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கின்றன. நாய்களைத் தடவிக் கொடுத்தபடியே பிஸ்கட் போட்டுவிட்டு, வீடுகளுக்குள் மெதுவாக நுழைந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள சட்டைப் பையில் இருக்கும் பணம், செல்போன், வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும், வீட்டின் வெளிப்பகுதியில் கிடக்கும் சின்னச் சின்னப் பொருட்களையும் எடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

தெருவை விட்டு வெளியேறும் போதும் நாய்களுக்கு பிஸ்கட் போட்டுவிட்டு செல்கிறார். ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளுக்குள் நுழைந்து திருடிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. சின்னச்சின்ன திருட்டு என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை போலீஸில் புகார் அளிக்கவில்லை.

நாய்களுக்கு பிஸ்கட் போடும் திருடன்

பிஸ்கட் கொடுத்து நாய்களைப் பழக்கி ஜன்னல் வழியே திருட்டில் ஈடுபட்டு வரும் சி.சி.டி.வி கேமரா காட்சிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நள்ளிரவு நேரங்களில் இதுபோன்ற தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வரும் பகுதிகளில் போலீஸார் ரோந்து சென்று திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3szPnXF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*