ரஷ்யா பறக்கும் அஜித்... தீபாவளிக்கு ரஜினியோடு மோதும் 'வலிமை'!

0

'வலிமை' படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடும் முனைப்பில் இருக்கிறது அஜித் & வினோத் டீம். படத்தின் சில காட்சிகள் மட்டும் இன்னும் எடுத்துமுடிக்கப்படவேண்டும் என்பதால் அதற்கான வேலைகள் இப்போது பரபரப்பாக நடக்கின்றன.

அஜித் சம்பந்தப்பட்ட ஒரு பைக் ஸ்டன்ட் ரேஸ் காட்சி இன்னும் எடுக்கப்படவேண்டியிருக்கிறது. அதற்காக நாளை ரஷ்யா செல்கிறார் அஜித். இயக்குநர் வினோத் உள்பட படக்குழுவினர் ஏற்கெனவே ரஷ்யா போய் இறங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித் - வலிமை

ஷூட்டிங்கிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்வதற்காகவும் இது கடைசி ஷெட்யூல் என்பதற்காகவும் போனிகபூர் ஏற்கெனவே ரஷ்யாவில் போய் முகாமிட்டிருக்கிறார்.

பைக் ஸ்டன்ட் சம்பந்தப்பட்ட ரிஸ்க்கான காட்சிகள் படம்பிடிக்கப்பட இருப்பதால் சகலவிதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகளோடு ஷூட்டிங் நிறைவடைகிறது. படம் முடிந்த பிறகு யூனிட்டில் வேலை செய்த அத்தனை பேருக்கும் சர்ப்ரைஸ் ட்ரீட் தரப்போகிறாராம் அஜித்.

'வலிமை' படத்தை தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தீபாவளி ரிலீஸாக நவம்பர் 4-ம் தேதி 'அண்ணாத்த' ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் அஜித், ரஜினி படங்கள் ஒரே நாளில் மோதப்போகின்றன. 2019 பொங்கலுக்கு ரஜினியின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் ஒரே நாளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.



from தமிழ் சினிமா https://ift.tt/3z4qaqN
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*