''சித்ராவோட அந்த சந்திப்பு முதலும், கடைசியுமா இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல!' - ராமர்!

0

'சேரன் பாண்டியன்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர், நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்த பிறகு 'நல்லெண்ணெய்' சித்ராவாக அடையாளப்படுத்தப்பட்டார்.

இவர் இன்று அதிகாலையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். பல நடிகர்கள் இவருக்கு தொடர்ந்து சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜய் டிவி ராமர்

சித்ரா கடைசியாக நடித்த திரைப்படம் 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா'. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து இந்தத் திரைப்படத்தில் சித்ரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் ராமரிடம் பேசினேன்.

''இந்தப் படத்தோட ஷூட்டிங் நாகர்கோவில்ல நடந்துச்சு. அங்கதான் நான் ஃபர்ஸ்ட் டைம் சித்ரா மேடமை நேர்ல பார்த்தேன். அவங்க நடிச்ச 'ஊர் காவலன்' படத்தை நான் நிறைய தடவை பார்த்திருக்கேன். அவங்களுடைய நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவங்களை நேர்ல சந்திச்சது ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு.

சித்ரா

என்னை பார்த்தவுடனே 'உங்களுடைய காமெடியெல்லாம் நான் பார்த்து ரசிச்சிருக்கேன். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு நீங்க சொல்லுவீங்களே அதுக்கு நானும் ரசிகை'ன்னு சொன்னாங்க. அதுமட்டுமில்லாம இந்தப் படத்தோட டைரக்டர் எனக்கு நண்பர். அவரிடமும் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்திருக்காங்க.

இந்தப் படத்துல அவங்க ஹீரோவுக்கு அம்மாவா நடிச்சிருப்பாங்க. முன்னாடி அவங்க நடிச்ச படங்களில் அவங்களை எப்படி பார்த்தோமோ அப்படியே தான் நான் பார்க்கும்போதும் இருந்தாங்க. திடீர்னு அவங்க இறந்துட்டாங்கங்குற செய்தி கேட்டதும் ரொம்பவே வருத்தமாகிடுச்சு. எங்களுடைய சந்திப்பு முதலும், கடைசியுமா இருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அவருடைய ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்!'' என்றார் ராமர்.

Also Read: "ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை இது மட்டும்தான்!"- தொகுப்பாளினி நிஷா



from தமிழ் சினிமா https://ift.tt/3k9YxGx
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*