Fact Check: `வளர்ந்த மரத்தை நட்டாரா வானதி சீனிவாசன்?' - வைரலாகும் புகைப்படம்; உண்மை என்ன?

0

``75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அவர்களால் நடப்பட்ட மரம்” என்ற போர்டு ஒரு மரத்தில் தொங்கியபடி இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் போர்டு

Also Read: `` `கன்னிப்பேச்சு' ஆட்சேபனை, கோவைக்கு தனி கவனம் செலுத்தும் முதல்வர்!" - வானதி சீனிவாசன் பேட்டி

``ஏற்கெனவே வளர்ந்த மரத்தை எப்படி நட முடியும்..? இது விளம்பரத்துக்காக செய்யப்பட்டது" என்று தொடங்கி ஏராளமான கமென்ட்களுடன் அந்தப் படம் நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிய முற்பட்டோம்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டோம்.

``பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நான் சூலூர் பகுதிக்குச் சென்றிருந்தேன். சூலூர் குளத்தை ஒட்டி ஆறு ஏக்கர் பரப்பளவிலான நிலம் முட்புதர்களால் மண்டிக் கிடந்தது.

வானதி சீனிவாசன் நட்ட மரக்கன்று

அந்த இடத்தை ஏராளமான நல்ல உள்ளங்கள் இணைந்து, `சூலூர் வனம்' என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி கடந்த 4 ஆண்டுகளாக நாட்டு மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அதேபோல அணில் மற்றும் பறவைகள் விரும்பிச் சாப்பிடும் மரங்களையும் நட்டு வருகின்றனர்.

அவர்களின் பணியைக் கேள்விப்பட்டு நேற்று இரவு அங்கு சென்று பார்வையிட்டேன். அப்போது எனது நினைவாக ஒரு மரக் கன்று நட ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக நான் நட்ட மரக் கன்றுக்குப் பின்னால் ஒரு மரத்தில், என் பெயருடன் போர்டு வைத்திருந்தனர். அந்தப் படத்தை பதிவிட்டதே நான்தான். அனைத்துப் படங்களையும் பார்த்தாலே உண்மை தெரியும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இதை ஒரு வாய்ப்பாக, கன்டென்டாக பதிவிடுபவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். அதைப் பற்றி கவலையில்லை. ஆனால், பயன்படுத்தப்படாமல் இருந்த நிலத்தை, இன்று பசுமை பரப்பாக மாற்றியவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என நினைத்தேன்... அவ்வளவுதான்” என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sDty9r
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*