தூத்துக்குடி, மேலசண்முகபுரம் சலவையாளர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், தூத்துக்குடி மாநகர 45-வது வட்ட தி.மு.க செயலாளராக இருந்தது வருகிறார். இதுதவிர, சொந்தமாக ஷிப்பிங் கம்பெனி ஒன்றையும் நடத்தி வந்தார். கடந்த 6-ம் தேதி, இரவு 12 மணிக்கு சண்முகபுரத்திலுள்ள முனியசாமி கோயிலில் கொடை விழா நடை பெற்றது. அதில் சிலர், மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த நடராஜன், அதை தட்டி கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
Also Read: நள்ளிரவு நேரம்... ரத்த வெள்ளத்தில் அம்மா, அப்பா... கதறிய சிறுவன்!- டெல்லியைப் பதறவைத்த கொலை
இதில், தாமோதரநகரைச் சேர்ந்த தங்க கார்த்திக் என்பவருக்கும் நடராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், தங்க கார்த்திக்கின் கன்னத்தில் நடராஜன் அறைந்ததாகச் சொல்லப்படுகிறது. நள்ளிரவில், கோயில் கொடைவிழா முடிந்து அவரது ஷிப்பிங் கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தபோது, நடராஜனை வழிமறித்த தங்க கார்த்திக் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 4 பேர் கத்தியால் சரமரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையப் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். நடராஜனின் ஷிப்பிங் கம்பெனியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், நடராஜனைப் பின்தொடர்ந்து வந்த 4 பேர், நடராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரைக் கல்லால் தாக்கி, கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், விசாரணை செய்ததில் தங்ககார்த்திக்கும் நடராஜனுக்கும் கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தங்க கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான அருண்குமார், அந்தோணி முத்து, மாரிமுத்து ஆகியோரைக் கைது செய்தனர்.
இவர்களில் தங்ககார்த்திக் போலீஸாரிடம், “மேலசண்முகபுரம், முனியசாமி கோயில் கொடை விழாவிற்கு நானும் எனது நண்பர்களும் போயிருந்தோம். கோயில் நிர்வாகிகளே அமைதியாக இருந்தபோது, நடராஜன் மட்டும் எங்களைப் பார்த்து ’கூட்டமாக வராதே’ என்று சொல்லித் திட்டினார். இதனால், எங்களுக்கும் நடராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
கோயில் திருவிழாவில் எல்லாரோட மத்தியிலும் என்னை அடித்தது, எனக்கு அவமானமாக இருந்தது. இதையடுத்து கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து காத்திருந்து நடராஜன் எங்கே போகிறார் என்பதைப் பார்த்து நோட்டமிட்டு அவரைப் பின் தொடர்ந்து கத்தியால் குத்தினோம்” எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3s3uGTS
via
