அருப்புக்கோட்டை : திமுக கரை வேட்டி கட்டி வந்தால் 3 இலவச பிரியாணி; ஊரடங்கை மறந்து கூடிய கூட்டம்!

0

திறப்பு விழா சலுகையாக சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்குவதாக அறிவித்ததால் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரியாணிக் கடை முன் மக்கள் குவிந்ததால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

இலவச பிரியாணி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே திமுக ஆதரவாளர் சாகிர் என்பவருக்கு சொந்தமான `சென்னை பிரியாணி' என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டது.

திறப்பு விழா சிறப்பு சலுகையாக தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை சட்டை மட்டும் அணிந்து வந்தால் ஒரு சிக்கன் பிரியாணி, வெள்ளை வேட்டி சட்டை அணிந்து வந்தால் இரண்டு சிக்கன் பிரியாணி இலவசம் என்று விளம்பரம் செய்தவர்கள், திமுக கரை வேட்டி அணிந்து வருகிறவர்களுக்கு மூன்று சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: ”இது நம்ம கெளரவப் பிரச்னை...” ஆலோசனைக் கூட்டத்தில் கர்ஜித்த ஸ்டாலின்!

முண்டியடித்த கூட்டம்

முதலைமச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்ட அமைச்சர்கள், கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு படத்துடன் கடை திறப்பு விழா சலுகை பற்றிய விளம்பரம் செய்திருந்தனர்.

கடைக்கு முன் தடுப்புகள் கட்டி, சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள், முக கவசம் அணியுங்கள் என்று கடைக்காரர்கள் அறிவிப்பு செய்தாலும், இலவச பிரியாணி ஆசையில் அனைத்தையும் மக்கள் மறந்தார்கள்.

திமுக கரை வேட்டியுடன் வந்தவர்

சிலர் வெள்ளை சட்டை அணிந்தும், சிறுவர், பெண்கள், பெரியவர்கள் என வெள்ளை சட்டை அணியாமலும் கடையின் முன் வரிசையில் நின்றதால் அனைவருக்கும் இலவச பிரியாணியை வழங்கினார்கள்.

திமுக கரை வேட்டி அணிந்து வந்தவர்களுக்கு அறிவித்ததுபோல் மூன்று சிக்கன் பிரியாணி பார்சல்களும், வெள்ளை வேட்டி சட்டையில் வந்தவர்களுக்கு 2 பிரியாணி பார்சல்களும் வழங்கினார்கள். மொத்தம் 3000 பிரியாணி பார்சல்கள் இலவசமாக வழங்கப்பட்டதாகக் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இலவச பிரியாணி

அதேநேரம், கொரோனா 3-ம் அலை பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுபோன்ற கடை திறப்பு விழாவில் அதிகமான அளவில் கூட்டத்தைக் கூட்ட அதிகாரிகள் அனுமதித்தது எப்படி என்று கேள்வியை அருப்புக்கோட்டை மக்கள் எழுப்பி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fFf8jR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*