யானை தந்தம் கடத்தல்: வனத்துறையை ஏமாற்ற வழியை மாற்றிய கும்பல்; சிக்கியது எப்படி?

0

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் யானை தந்தங்களை சிலர் வாங்குவதற்கு வருவதாக கோவை வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர்கள் உள்ளிட்ட குழு இதுகுறித்து தொடர்ந்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவை

Also Read: `திருடப்பட்ட யானை தந்தம்; கசிந்த தகவல்!’ - 2 ஆண்டுகளுக்குப் பின் வனத்துறையிடம் சிக்கிய கும்பல்

அதன்படி கடந்த வியாழக்கிழமை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தந்த விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து, நிலவரத்தை உதவி வனப்பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காணிக்கத் தொடங்கினார்கள். ஆனால், தகவல் கிடைத்தது போல அங்கு ஏதும் நடக்கவில்லை. அதன் பிறகு விசாரித்தபோது, வனத்துறை கண்காணிப்பு செய்வதால் தந்தம் விற்பனையை கடைசி நேரத்தில் சேலம் மாவட்டத்துக்கு மாற்றியது தெரியவந்தது.

சேலம்

Also Read: Fact Check: `வளர்ந்த மரத்தை நட்டாரா வானதி சீனிவாசன்?' - வைரலாகும் புகைப்படம்; உண்மை என்ன?

உடனடியாக இந்தத் தகவலை சேலம் வன பாதுகாப்புப் படை அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பணியாளர்கள் சேலம் சென்றனர்.

இரண்டு மாவட்ட வனத்துறையும் சேர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, வாழப்பாடி அருகே ஒரு ஜோடி தந்தங்களை விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட தந்தங்கள் (11 கிலோ) கைப்பற்றப்பட்டு சேலம் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யானை தந்தம்

கைது செய்யப்பட்ட சசிகுமார், சேட்டு, பரத், பிரவீன்குமார், அருண்குமார் ஆகிய 5 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3z61T3u
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*