“நான் பார்க்காத ஜெயிலா.. காசு கொடு.. கொடுக்க முடியாதா..? கபாலியோட லேட்டஸ்ட் அடி பார்த்துக்கோ.. உன்ன விட மாட்டேன்..” என்று சொல்லி கொண்டே ஒரு போதை ஆசாமி இன்னொரு நபரை அடிக்கிறார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தான் இந்தக் காட்சி.
Also Read: கும்பகோணம்: துரத்திச் சென்ற போலீஸ்; மர்மமான முறையில் இறந்து கிடந்த ரவுடி - நடந்தது என்ன?
காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது, போதை ஆசாமிகள் தகாத வார்தைகளில் பேசி கட்டிப்புரண்டு சட்டை போட்டுக் கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் அதில் ஒருவர் பிளேடு கபாலி என்று அழைக்கப்படும் பிரபல ரெளடி என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து காட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதைக்கு அடிமையான பிளேடு கபாலி, பேருந்து நிலையத்தில் பயணிகளை காசு கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கஞ்சா போதையில் சுற்றும் கபாலி, வாயில் உள்ள பிளேடால் துப்பி, மிரட்டி நூதனமாக பிக்பாக்கெட்களில் ஈடுபடுவார். காந்திபுரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கபாலி மீது பலமுறை புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அவரால் மக்களுக்கு விபரீதம் எதுவும் ஏற்படுவதற்கு முன் காவல்துறை அவன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ly3n2D
via
