கோவை: சாதி கொடுமையா?! - காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட அரசு ஊழியர்!

0

``இப்ப எல்லாம் யாரு சார் சாதி பார்க்கறாங்க?” என்ற கருத்து இப்போதும் பரவலாக இருந்து வருகிறது. ஆனால், அதை உடைக்கும் வகையில் ஏராளமான தீண்டாமை கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. அப்படி ஓர் சம்பவம்தான் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நடந்துள்ளது.

ஒட்டர்பாளையம்

Also Read: மதுரை: தீண்டாமை வன்கொடுமைச் சட்டம்; தவறாகப் பயன்படுத்துகிறதா காவல்துறை?!-குற்றச்சாட்டும் விளக்கமும்

அன்னூர் ஒன்றியத்தில் உள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணி செய்துவருபவர் முத்துசாமி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்று அழைக்கப்படும் கோபாலசாமி என்பவர் தன்னுடைய சொத்து விபரங்களை சரிபார்ப்பதற்காக ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, ``ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே, முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள்” என்று கூறியுள்ளார்.

காலில் விழுந்து மன்னிப்பு

இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் கலைச்செல்வியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது உதவியாளர் முத்துசாமி கோபிநாத்தை தடுக்க முயன்றுள்ளார்.

இதில் மேலும் ஆத்திரமடைந்த கோபிநாத் தனது சாதி பெயரை சொல்லி, முத்துசாமியை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. “நான் நினைத்தால் நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது. நீ இந்தப் பணியில் தொடர வேண்டும் என்றால், என் காலில் விழுந்து மன்னிப்பு கேள்” என்று கூறிதாகவும் சொல்லப்படுகிறது.

காலில் விழுந்து மன்னிப்பு

இதனால், முத்துசாமி கோபிநாத்தின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி, கலைச்செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே வேளையில், கோபிநாத்தும், கலைச்செல்வி, முத்துசாமி ஆகியோர் மீது காவல் நிலையத்தில், `தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாக’ புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக மாவட்ட நிர்வாகமும் அறிவித்திருக்கிறது.

Also Read: ஆதிக்க சாதி, அடிமை சாதியெல்லாம் இப்போது கிடையாது! - ‘சீரியஸாக’ சொல்கிறார் எம்.ஆர்.காந்தி!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xuiKvl
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*