``சோனியா, ராகுல் தலைமையில் மீண்டுமொரு சுதந்திரப் போர்!" - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

0

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடைப்பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்ட அந்தப் பேரணிக்கு தலைமையேற்றுப் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் நமக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பறிபோய் கொண்டிருக்கிறது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சைக்கிள் பேரணி

மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. விலைவாசியும் விண்ணை முட்டி நிற்கின்றது. கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் மோடி, மாநிலங்களை ஒடுக்க வேண்டுமென்றும், அடிமை ஆட்சியை நடத்த வேண்டுமென்றும் விரும்புகிறார்.

தொடர்ச்சியாக மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கிறார். அதிகாரம் இல்லாமல் நீட் தேர்வை புகுத்துகிறார். நாட்டின் அத்தனை வளங்களையும் மோடியின் அரசு தனியார் மயமாக்கி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி தலைமையில் இன்னொரு சுதந்திரப் போராட்ட போரைச் சந்திக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. அந்த போர் 2024-ம் ஆண்டு நடைபெறும். அப்போது நாட்டின் பிரதமராக ராகுல் காந்தியை கொண்டுவந்து ஜனநாயகத்தை மீட்போம். மோடியின் அடிமை ஆட்சியிலிருந்து மக்களுக்கு விடுதலை கொடுப்போம்.

Also Read: புதுச்சேரி: `போலி பத்திரம் மூலம் நில அபகரிப்பு!’ - முன்னாள் முதல்வர் நாராயணசாமி `பகீர்’ தகவல்

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் புதுச்சேரியில் ஆட்சி நடக்கிறதா என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியின் முதல் தோல்வியே கொரோனாவை கட்டுப்படுத்தாததுதான். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத்தான் தற்போது ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாக எந்தத் திட்டமும் இல்லை. கடந்த ஆட்சியில் நாங்கள் மத்திய அரசிடமிருந்து ஒரு ஆண்டுக்கு 125 கோடி அதிகமாக மானியம் வாங்கினோம். ஆனால் இன்று வெறும் 24 கோடி தான் வாங்கி இருக்கிறார்கள். இந்த ஆட்சி தோல்வியடைந்த ஆட்சி” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lLcJbj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*