திமுக வேட்பாளர் குறித்து அவதூறு பேச்சு; நெல்லை கண்ணன் மீது திமுக வழக்கறிஞர்கள் போலீஸில் புகார்!

0

கடந்த ஆண்டு, நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான நெல்லை கண்ணன், மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அத்துடன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டபோது ( பழைய படம்)

அந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவர் 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு அரசியல் கட்சியினர் பலரும் அப்போது எதிர்ப்புத் தெரிவித்தார்கள். சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தார்.

தற்போது அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தைப் பேசியதாகப் புகார் எழுந்திருக்கிறது. நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய நெல்லை கண்ணன், தி.மு.க குறித்து அவதூறான கருத்தைப் பேசியதாகப் புகார் எழுந்திருக்கிறது.

Also Read: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல்! - 7 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க-வினர் அளித்த புகார் மனு

இது தொடர்பாக தி.மு.க மாநகர வழக்கறிஞரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரன், துணை அமைப்பாளர் பலராமன் ஆகியோர் நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், “கடந்த 6-ம் தேதி தோழ்ர்.சங்கரய்யாவின் நூற்றாண்டு விழா கூட்டம் நெல்லையில் நடந்தது. அதில் பேசிய நெல்லை கண்ணன், திமுக குறித்தும், தி.மு.க-வின் நெல்லை மாநகர செயலாளரான ஏ.எல்.எஸ்.லட்சுமணன் குறித்து அவதூறாக பேசினார்.

ஏ.எல்.எஸ்.லட்சுமணனை ஒருமையிலும் கேவலமான வார்த்தையாலும் நெல்லை கண்ணன் பேசினார். அவரது பேச்சு பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையிலும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.

கமிஷனரிடம் புகார் அளித்த தி.மு.க வழக்கறிஞர்கள்

நெல்லை கண்ணன் பேச்சு குறித்து உரிய விசாரணை நடத்தில் அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க வழக்கறிஞர்கள் அளித்துள்ள இந்த மனு காரணமாக நெல்லை கண்ணன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருகிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xsHIv2
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*